பக்கம்:மலர் மணம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 மலர்

அவர் என்னிடம் வந்தால் நான் அறையும் குத்தும் விடுவேன் ஆதலால் அவரும் நெருங்கவில்லை.

போலிசு காவலர்கள், இன்சுபெக்டர் ஆணையை மீறி இப்படி நடந்துகொள்வார்கள் என்று நான் கன விலும் கருதவில்லை. எல்லோரும் சேர்ந்து என்னைப் பிடித்துக்கட்டி நையப் புடைப்பார்கள் என்றே எண்ணி னேன். ஆனல் அது கடக்கவில்லை. ஏன் ?

பாண்டியனைத்தவிர மற்ற போலீசார் எல்லோரும் பல நாளாக எங்கள் ஊரில் இருப்பவர்கள். என்னேயும் என் தகப்பைைரயும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களுள் சிலர் எங்கள் மனையில் குடியிருக்கிறார்கள் ; சிலருக்கு எங்களிடம் பற்று வரவும் உண்டு. இந்தக் காரணத்தால் அவர்கள் என்னே ஒன்றும் செய்யாது சம்மா இருக்கவில்லை. இதல்ை அவர்கள் சும்மா இருந்திருப்பார்களே யால்ை, அது, தலைவனுக்குக் கீழ்ப்படியாத தவருகக் கருதப்படும். ஆல்ை, அவர்கள் எங்களைப் பற்றி நன்றாகப் புரிந்துவைத்திருந்தார்கள். நாங்கள் நல்லவர்கள்-எந்த வீண் வம்புக்கும் போகாத வர்கள்-யாரொருவருக்கும் நன்மையைத் தவிர, சிறு தீமையும் செய்தறியாதவர்கள்-என்பதை அவர்கள் அநுபவவாயிலாகப்புரிந்து வைத்திருக்கிறார்கள். இதல்ை மட்டும் அவர்கள் என்னே ஒன்றும் செய்யாது விடவில்லை. பாண்டியன் சொந்த விவகாரம் காரணமாகவே நேர்மை, யின்றி என்னைத் தாக்குகிறார் என்பதை அவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டதேைலயே அவரோடு ஒத் துழைக்காமல்-தம் தலைவராயிருந்தும் அவர் ஆணைக்குக் கட்டுப்படாமல் சும்மா இருந்துவிட்டார்கள். இதுவும் சரிதானே ! நீதியின் முன் எல்லோரும் ஒன்றுதானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/156&oldid=656001" இலிருந்து மீள்விக்கப்பட்டது