பக்கம்:மலர் மணம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 155

அவர்களுடைய நல்ல ஒத்துழைப்பு இல்லாமல் மேற் கொண்டு பாண்டியன் எதுவும் செய்துவிட முடியாது.

பாண்டியன் வருமுன் னிருந்த இன்சுபெக்டர்கள் பலரும் கல்லவர்களே-என் தந்தையாருக்கு நெருங்கிய நண்பர்களாகவும் இருந்திருக்கிறார்கள் ஊரிலும் அவர் களுக்கு நல்ல பெயர் இருந்தது. ஏன், பாண்டி யனுக்குக்கூட ஊரில் நல்ல பெயர் என்றுதான் கேள்விப் பட்டிருந்தேன். ஆயினும், அவர் தம் சொந்தக் காழ்ப்பு காரணமாகவே என்னிடம் முறைதவறி நடந்துவிட்டார். இன்னும் அவருடைய சினம் அடங்கவில்லை.

“ இப்பொழுது தப்பித்துக் கொண்டாய் ! சரி போ! உன்னே இன்னொரு முறை பார்த்துக்கொள்கிறேன்.” என்று பாண்டியன் நஞ்சைக் கக்கினர். ‘ என்னே எப்பொழுதுமே யாருமே எதுவுமே செய்யமுடியாதுமடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம் இருக்கும் ? நீ உன்ல்ை ஆன்தைப் பார்த்துக்கொள்ள லாம் ‘ என்று ப்திலுரைத்தேன்.நீரின். ‘ என்றைக்கா வது ஒரு நாள் என் கர்ஜில் விழ்ந்து இகஞ்சும்படி உன்னைச் செய்கிறேன்” என்று அவ்ர் வஞ்சின்ம் கூறினர். என் உயிர் போவதாயிருந்தாலும், ஒருபோதும் நான் உன் காலில் விழவும் மாட்டேன்-கெஞ்சவும் மாட்டேன் ” என்று கூறிப் பதில் சூள் எடுத்துக் கொண்டேன். அவர் கறுவினர். நான் முறுவினேன். பின்னர் அவ்விடத்தை விட்டு வீடு நோக்கி நடந்தேன்.

அப்பாவிடம் நடந்தவற்றை ஒன்றுவிடாமல் விவரித் தேன். அவர் உணர்ச்சி வயப்பட்டார். ‘ அவனை நம்பு வதற்கில்லே என்றைக்கிருந்தாலும் அவன் பழிவாங் காது விடமாட்டான் ; ஆதலால், அவனுக்குமுன் நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/157&oldid=656002" இலிருந்து மீள்விக்கப்பட்டது