பக்கம்:மலர் மணம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மலர்

அல்லியின் விருப்பப்படி நான் நடந்துகொள்ள வேண்டுமாயின் திங்கட்கிழமை கல்லூரிக்குப் போக முடியாது. விடுமுறை எடுக்கவேண்டும். அதற்கு எங்கள் கல்லூரித் தலைவர் ஒப்பவேண்டும். அவர் விடுமுறை தந்தாலும் ஊர் சென்றால் என் தந்தையார் காரணம் கேட்பார். எல்லோரும் ஒத்துக்கொண்டாலும் என் உள்ளம் ஒத்துக்கொள்ள வேண்டுமே. விடுமுறை எடுப்பதென்றால் எனக்கு வேப்பங்காய் வெறுப்பு. எப் போதுமே அது எனக்குப் பிடிக்காது. படி க்கு ங் காலத்துக் கைக்கொண்ட இக் கெட்ட பழக்கந்தான் அலுவலகத்தில் வேலேபார்க்கும் பொழுதும் சிலரை ஆட்டிப் படைக்கின்றது. தொட்டில் பழக்கம் கடைசி மட்டும் அல்லவா ? எனவே, யான் எப்படி விடுமுறை எடுத்துக்கொள்ள வியலும் ?

அப்படியே விடுமுறை எடுப்பதென்றாலும் அல்லிக் காகவா எடுப்பது ? இந்நிலையில் சிலர், அல்லிக்கும் எனக்கும் ஏதோ நீண்டநாள் காதல் என்று நினைக்கக் கூடும். காதலும் இல்லே-கத்தரிக்காயும் இல்லை. எப் போதுமே எனக்குக் காதலில் நம்பிக்கையில்லை. சிலர், காதல் மாசற்றது-புனிதமானது-தெய்வீகமானதுஎன்றெல்லாம் புனைந்துரைப்பார்கள். காமம் ஏதோ இழிந்த உணர்ச்சி என்றும், காதலோ உயர்ந்த நிலை யுடையது என்றும் அவர் க ள் கூறுவர். எனக் கென்னவோ காதலுக்கும் காமத்துக்கும் வேற்றுமையே தெரிவதில்லை. இன்னுஞ் சிலர், கைகூடும்வரை காதல், கைகூடியபின் காமம் என்பர். ஆனால், கைகூடும் வரை காமம், கைகூடியபின் காதல் என்பது என் அகராதிப் பொருள். உணர்ச்சி வயப்பட்டவர்களே தம் உணர்ச்சியைத் தீர்த்துக்கொள்ளக் காதல் காதல் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/16&oldid=656004" இலிருந்து மீள்விக்கப்பட்டது