பக்கம்:மலர் மணம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 161.

‘ முன் ஏர் போவது போலத்தான் பின் ஏரும் போகும் என்பார்கள். இத் த ைக ய சீர்திருத்தக் கருத்துக்கள் எல்லாம் என்மூலம் நீ பெற்றவையே ! நானும் ஒத்துக்கொள்கிறேன்-உடன்படுகிறேன்; ஆல்ை, இந்தக் கோரிக்கையை எடுத்துக்கொண்டு நம் அப்பா விடம் நெருங்கவே முடியாது!” .

‘பெண்பிள்ளையால்தான் முடியாது. ஆண்பிள்ளை நீ இருக்கிருயே அண்ணு! நீ எனக்கு அண்ணன் மட்டும். அல்லே-தாய்தந்தை எல்லாம் தோன் அண்ணு எனக்கு!”

“ ஒட்டாரம் செய்யாதே கற்பகம் ! உன் எண்ணம் ஈடேறவேண்டுமானல், இடையிலே எத்தனையோ இமய மலேகளையும்-பசிபிக் பெருங்கடலையும் கடக்கவேண்டும். நானே பாண்டியனுக்குப் பகைவனுகி விட்டேன். அதைக்கூட சரிகட்டி விடலாம்; ஆல்ை அப்பாவைத் தான் சரிகட்ட முடியாது. ஒன்று, நம் அப்பா இறக்க வேண்டும்-அல்லது, அவரை மீறி-அவரைப் பகைத்துக் கொண்டு-அவரைப் பிரிந்து நான் உனக்கு இந்தத் திருமணத்தை முடித்துவைக்க வேண்டும். வேறு வழியில்லை கற்பகம் !’

‘அண்ணு அண்ணு அப்படிச் சொல்லாதே. அண்ணு! அப்பா இறந்தபின்போ, அல்லது அவரைப் பகைத்துக்கொண்டோ செய்துகொள்ளும் திருமணத்தை நான் விரும்பவில்லை. எதற்கும் அப்பாவிடம் முயற்சி செய்துபார் அண்ணு எந்தத் தங்கையும் தன் அண்ண னிடத்தில் தன் திருமணத்தைப்பற்றி நாணமில்லாமல் இவ்வளவு வெளிப்படையாகப் பேசமாட்டாள். இளமை, யிலிருந்தே நீ என்னை நண்பனைப்போல் பழக்கிப் புரட்சி கரமாக-சீர்திருத்தமாக வளர்த்து வந்ததேைலயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/163&oldid=656008" இலிருந்து மீள்விக்கப்பட்டது