பக்கம்:மலர் மணம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.162 மலர்

நான் உள்ளிடம் இதுபற்றி மனம்விட்டுப் பேசுகிறேன். அடுப்பங்கரையில் அடைபட்டுக் கிடக்கும் பெண்ணின் மனத்தை அப்பாவிடம் எடுத்துச்சொல் அண்ணு பெண் களுக்கும் மனம் உண்டு--மனவெழுச்சிகளாகிய இன்பம், துன்பம் எல்லாம் உண்டு என்று நினைவுசெய்துவை அண்ணு ஒருவனுக்குக் கா ஃ பி யு ம் தாம்பூலமும் கொடுத்துவிட்டு, இன்னொருவனே மணந்துகொள்ள எல்லாப் பெண்களுமே உடன்பட மாட்டார்கள். வருவார் போவாரிடமெல்லாம் காட்டிப் பேர்ம்பேசப் பெண்கள் என்ன ஆடா ? மாடா ? என்று அப்பாவிடம் கேட்டுவை அண்ணு இனி எந்தப் பயலை அழைத்துக் கொண்டு வந்தாலும், நான் அவனெதிரே ஆடிக் காட்டவோ-பாடிக் காட்டவோ முடியாது. வருபவன் எவனும் என்னைப் பார்க்கவும் முடியாது. இதையும் அப்பாவிடம் சொல்லிவிடு அண்ணு!”

என்று சொல் லி விம்மி வெதும்பிக்கொண்டே கற்பகம் அப்பால் அகன்று சென்றாள். அவள்மேல் எனக் கிருந்த அன்பு முன்னிலும் பெருகியது. மிகவும் இரக்கப் பட்டேன். பெண்மனம் எத்தகையதென்று புரிந்து கொண்டேன். குரு குசனைப் பார் க் கி ரு ன். குசன் சுக்கிரனைப் பார்க்கிருன், சுக்கிரன் சூரியனைப் பார்க் கிருன், நான் உன் பையிலுள்ள பணத்தைப் பார்க் கிறேன் என்று சோதிடர்கள் சொல்வதுபோலு, கற்பகம் பாண்டியனைப் பார்க்கிருள், பாண்டிய்னே அல்லியைப் பார்க்கிருன், அல்லியோ என்னேப் பார்க்கிருள், நர்னே என் தலையெழுத்தைப் பார்க்கிறேன். என்ன செய்வது!

சிறு வயதிலிருந்தே அண்ணன் தங்கை என்ற முறையில் இல்லாது, நண்பனைப்ப்ோல வேடிக்கை விளையாட்டுகளுடன் கற்பகத்திடம் ப ழ கி வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/164&oldid=656009" இலிருந்து மீள்விக்கப்பட்டது