பக்கம்:மலர் மணம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 163.

என்ேைலயே அவள் இவ்வளவு உறுதியாக இருப்பாள் என்று முன்கூட்டி உணரமுடியவில்லை. அப்பா எங்கே உணரப்போகிறார் ? நம் நாட்டில் பெண்மனத்தைப் புரிந்து மதித்து நடக்கும் அளவுக்குப் பெற்றேர்கள் இன்னும் தயாராக வில்லை. ஆண்மக்களாயினும் பெற்றாேர்களே அச்சுறுத்திக் காரியத்தை முடித்துக் கொள்கிறர்கள். பெண்மக்கள் யாது செய்வர்? பெற்றாேர்கள், பிள்ளைகளின் மனவெழுச்சிகளைப் புரிந்து மதித்து அவற்றிற்குத் தக்க போக்குக் காட்டாது, அவற்றினை அடக்கி ஒடுக்கி நசுக்குவார்களேயாயின், அம்மனவெழுச்சிகள் நீறுபூத்த நெருப்பே போல உள்ளேயே கனிந்துகொண்டிருந்து, உறுமீன் வருமளவும் வாடியிருக்கும் கொக்கைப்போல உரிய காலம் வந்ததும் உரிய உருவத்தைக் காட்டத்தான் செய்யும் !

நான்தான் இளிச்சவாயன். பிள்ளைகள் முதலில் பெற்றாேர் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்-பிறகு, தான் தம் விருப்பத்தைக் கவனிக்க வேண்டும்பெற்றாேர்க்காக எந்தத் தியாகமும் செய்ய வேண்டும் என்று நான்தான் சொல்லிக்கொண் டிருக்கிறேன். உலகில் எல்லாப் பிள்ளைகளுமே இப்படி யிருப்பார்களா? எனவே, பிள்ளைகளின் நிலையறிந்து-அதிலும் பெண் மனம் அறிந்து பெற்றேர்களுந்தான் விட்டுக்கொடுக்க வேண்டும். இந்தத் திருத்தங்கள் எல்லாம் நம் நாட்டில் ஏற்பட இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ ?

கற்பகத்தின் க ட் ைட த் தூக்கிக்கொண்டு, அவளுடைய வழக்கறிஞகை அப்பாவிடம் வாதாடச் சென்றேன். செவ்வியறிந்து அவரிடம் ம்ெல்ல நிலமையை எடுத்துச் சொன்னேன். இப்படி யொரு பெண்ணும் எனக்குப் பிறந்திருக்கிருளா ? என்று அவர் மூக்கின்மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/165&oldid=656010" இலிருந்து மீள்விக்கப்பட்டது