பக்கம்:மலர் மணம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 165

முன்னர் இன்னிசை எழுப்பி அசுணப் பறவைகளை மயங்கச்செய்து, பின்னர் பறைகொண்டு வல்லோசை முழக்கி அவற்றைக்கொல்லுதல்போல, நாம் இப்போது அவளைக் கொல்லாமல் கொன்று வருகிருேம். அவள்மேல் ஒன்றும் தவறில்லை-இது நம்முடைய தவறுதான்"ஆசைகாட்டி மோசம் செய்த குற்றம் நம்முடையதுதான் அப்பா நம்முடையதுதான். நீங்கள் அப்போது பாண்டியன்முன் அவளை அனுப்பியிருக்கக் கூடாதுஅவனுக்கு ஒன்றும் கொடுக்கவைத்திருக்கக் கூடாது. இது மிகவும் கெட்ட பழக்கம். இப்பொழுதும் கற்பகம் என்ன சொல்லுகிருள் தெரியுமா ? நீங்கள் நினைக்கிறபடி அவள் ஒன்றும் காமப்பித்து கொண்டவள் அல்லள். கற்பு .ெ றி யி லே யே நிற்கிருள். கட்டிக்கொண்டால் பாண்டியனைக் கட்டிக்கொள்வது-அல்லது கன்னி யாகவே காலம் கழிப்பது என்ற முடிவில்தான் இருக் கிருள். இனி எந்த மாப்பிள்ளை பார்க்க வந்தாலும் அவள் வெளியே வரமாட்டாளாம் - அவளே யாரும் பார்த்து விட்டுப் போக முடியாதாம். அது சரிதானே ? -குடுண்ட பூனையல்லவா? ஆல்ை, வருகிற எந்த மாப்பிள்ளையும் பெண்ணேப் பார்க்காமல் மணந்து கொள்ள இந்தக் காலத்தில் ஒத்துக் கொள்ளப் போவ தில்லை. இதற்கு என்ன செய்வது ? நீங்களே சொல்

லுங்கள் அப்பா !”

நான்தான் சொல்லிவிட்டேனே ! உற்றார் உற வினருக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். இந்த உடம்பிலே உயிர் ஒட்டிக்கொண்டிருக்கிற வரைக்கும் நான் இந்தக் கலப்பு மணத்துக்கு ஒத்துக்கொள்ள முடியாது. யோயிற்று-அவளாயிற்று. வேண்டுமானல்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/167&oldid=656012" இலிருந்து மீள்விக்கப்பட்டது