பக்கம்:மலர் மணம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 மலர்

“நீங்கள் சொல்வது சரியன்று. இங்கே ஓர் உண்மை இருக்கிறது ; அதை யாரும் புரிந்துகொண்ட தாகத் தெரியவில்லை.”

“ என்ன அது ?”

‘பாண்டியன், முத்தைய முதலியாருக்கும் இப் பொழுதுள்ள மனைவிக்கும் பிறந்த பிள்ளே இல்லை. முத்தைய முதலியாருக்கு இப்பொழுது இருப்பவள் இரண்டாங் தாரம்--கலப்புமணம் செய்துகொண்டவள். அவருடைய முதல் தாரத்துப் பையன்தான் பாண்டியன். முதல்தாரத்து மனைவியோ, உங்கள் குலமாகிய முதலி யார் வகுப்பைச் சேர்ந்த பெண்தான். நீங்கள் நன்றாக விசாரித்துப் பார்த்தால் உண்மை தெளிவாகும். இரண் டாவது மனைவி, தனக்குப் பிள்ளையில்லாததால், தன் சொந்த மகனுகவே கருதிப் பாண்டியனை வளர்த்து வந்தாள். பாண்டியனும் அவளே மாற்றாந்தாயாகக் கருதாமல் சொந்தத் தாயாகவே கருதி வளர்ந்துவந்தான். இதுதான் உண்மை. சத்தியம் வேண்டுமானலும் செய் கிறேன்.”

‘ஓ, அப்படியா ! இருந்தாலும் இருக்கலாம். ஆலுைம், முத்தையமுதலியார் நடுவில் சாதிவிட்டுச் சாதி தாண்டித்தானே இருக்கிறார். ‘ -

‘ அதனுல் என்ன ? சா தி .ெ க ட் டு ப் பிறந்த பிள்ளைக்கு நீங்கள் பெண் கொடுக்கப்போவதில்லையே! மேலும் இரண்டாவது மனைவிக்குப் பிள்ளேயே கிடை யாது. இந்தத் தலைமுறையோடு இந்த வடு நீங்கிவிடும். அப்புறம் எதைப்பற்றி உங்களுக்குக் கவலை ?”

“ சொல்வது சரிதான். ஆனல் முத்தைய முதலி யார் மட்டும் ஒத்துக்கொண்டால் போதுமா ? அவர் மகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/170&oldid=656016" இலிருந்து மீள்விக்கப்பட்டது