பக்கம்:மலர் மணம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 169:

பாண்டியன் ஒத்துக்கொள்ள வேண்டுமே! முந்திகூட மாப்பிள்ளைதானே மறுத்துவிட்டார் ? அதுவுமல்லாமல், என் மகனும் பாண்டியனும் ஒரு நாள் மோதிக்கொண் டிருக்கிறார்கள். இந்த கிலேயில் அவர் எப்படி ஒத்துக் கொள்வார் ? பழையபடி வேதாளம் முருக்க மரத்தில்

ஏறிக்கொண்டால் என்ன செய்வது ?”

“மகனேயும் கலந்துகொண்டுதான் முத்தைய முதலி யார் என்னே உங்களிடம் அனுப்பியுள்ளார். முதலில் மகன் ஒத்துக்கொள்ளவில்லைதான். மாயாண்டி முதலி யார் மகளேயே கட்டவேண்டும் என்று சொன்னர், அதற்கு முத்தைய முதலியார் மகனைப் பார்த்து. பாண்டியா மாயாண்டி மகள் அல்லி உன்னை வெறுக் கிருள் என்றும், அம்பலவாண முதலியார் மகள் கற் பகமோ உன்னத் தவிர வேறு யாரையும் மணப்பதில்லை என்று இருக்கிருள் என்றும் குருசாமி என்னிடம் கூறி யிருக்கிறார். தாகை வருகிற திருமகளைக் காலால் உதைத்துத் தள்ளாதே ‘ என்று தாங்க உரைத்தார். இதைக் கேட்டதும், பாண்டியன் மனம் மாறிவிட்டது. படித்த பிள்ளையல்லவா ? என்ன ! அல்லி என்னே வெறுக்கிருள் கற்பகம் என்னேயே விரும்புகிருளா ? அப்படியென்றால் அந்தப் பெண்ணேத்தான் மணந்து கொள்வேன். என்ன விரும்பும் பெண்ணேடு கடத்தும் இல்லறமே இனிப்பாயிருக்கும்’ என்ற முடிவுக்குப் பாண்டியன் வந்தார். தந்தையிடம் தன் உடன்பாட்டை யும் தெரிவித்தார். ஆல்ை ஒரே ஒரு கட்டாயம் விதித் திருக்கிறார். அதை நிறைவேற்றில்ை உங்கள் பெண்ணே அவர் மணந்து கொள்வாராம்.”

‘ என்ன கட்டாயம் அது ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/171&oldid=656017" இலிருந்து மீள்விக்கப்பட்டது