பக்கம்:மலர் மணம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 173

அருந்தவ மகனே-ஆருயிரை, எங்கள் உயிர் இருக்கும் போதே, யாங்கள் அறிய ஒருவன் காலில் விழுவதற்கு விடவே மாட்டோம். ஐயா காளியப்பரே ! உங்கள் மாப்பிள்ளேயும் கெட்டான்-அவன் உறவும் கெட்டது, நீர் எழுந்து போகலாம்”

என்று அப்பாவும் அம்மாவும் கன்னத்தில் அறைவது போல் கடிந்து பேசிவிட்டனர். ‘ சாமி வரங்கொடுத்தும் பூசாரி வரங்கொடாததைப் போல, அண்ணன் ஒத்துக் கொண்டும் அப்பாவும் அம்மாவும் உடன்படவில்லையே! இவர்கள் மனம் என்ன கல்லா ? ஏன் என்னே இவர்கள் பெற்றார்கள் ? இவர்களே நோக்க அண்ணன் எவ்வளவோ மேல்” என்று கற்பகம் எண்ணிக்கொண் டிருப்பாள் என்று கருதி அவள் முகத்தை நோக்கினேன். அவளோ, என் காலில் வந்து விழுந்து கதறத் தொடங்கிவிட்டாள்.

‘ அண்ணு அண்ணு எனக்காக நீ எவன் காலிலும் விழவேண்டியதில்லை-மன்னிப்பும் கேட்க வேண்டிய தில்லை-உன் மானத்தை வாங்கி நான் ம ன ந் து கொள்ளவும் வேண்டியதில்லை. இந்தத் திருமணத்தையே நிறுத்திவிடுங்கள். எனக்கு அண்ணன் பெரிதே தவிர திருமணம் அன்று. என் உயிரினும் இனிய அண்ணனைக் காலில் விழச்சொல்லுகிற மாப்பிள்ளையும் எனக்கு வேண்டாம். நான் என் மனத்தை மாற்றிக்கொண்டேன். இனி.எவனே வேண்டுமானலும் மணந்துகொள்ளத் தயாரா யிருக்கிறேன். என் அண்ணன் சீருஞ் சிறப்புமாய் வாழ்ந் தால் அதுவே எனக்குப் போதும்!”

என்று என் காலக் க்ட்டிக் கொண்டு கற்பகம் கதறினுள். என்ன செய்வதென்றே எனக்குப் புரியவில்லை. பெற்று வளர்த்த பெரும் பற்று காரணமாக, யான் யார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/175&oldid=656021" இலிருந்து மீள்விக்கப்பட்டது