பக்கம்:மலர் மணம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 மலர்

காலிலும் விழக்கூடாதென்று என் பெற்றாேர் நினைப்பதும் சரிதான்-என்னை உயர்ந்த நிலையில் வைத்துக்காண முயலுவதே அவர்கள் கடமை. அதேபோல, தன்னல் அண்ணனுக்கு எந்த இழிவும் ஏற்படாதபடிப் பார்த்துக் கொள்வது கற்பகத்தின் கட்மை-அதுவும் சரிதான் ! ஆணுல் என்கடமை என்ன ?

பெண்ணேக் கட்டிக்கொடுக்க வேண்டுமே என்று பேதுற்று மயங்கும் பெற்றேரின் சுமையைக் குறைக்கவேண்டியது பிள்ளையின் கடமையல்லவா? தன் வாழ்வு என்ன ஆகுமோ என்று தவித்துத் தத்தளிக்கும் தங்கைக்கு நல் வாழ்வு தேடித்தருவது அண்ணன் கடமையல்லவா? ஆம் கடமையாற்றப் புறப்பட்டேன்.

‘நீ போய் அவன் காலில் விழுந்துவிட்டு வீட்டிற்குத் திரும்புவாயே யானுல், எங்களே உயிரோடு இங்கே பார்க்கமுடியாது” என்று சொல்லி அப்பாவும் அம்மாவும் கற்பகமும் புரட்சி செய்தார்கள்.

“ இப்படியே முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே போனல், கற்பகத்திற்கு எப்போது திருமணம் ஆவது ? என் ஒரே ஒரு தங்கைக்கு-உயிரினும் மேலான தங்கைக்குக் காலத்தோடு திருமணஞ் செய்துவைத்துக் கண்குளிரப் பார்க்க எனக்கு உரிமையில்லையா ? தன் மனத்துக்கு உகந்த மணவாளைேடு அவள் வாழ்வதைப் பார்த்துப் பூரிப்புகொள்வதற்கு நான் கொடுத்துவைக்க வில்லையா ? உங்களுக்கு இது பொறுக்க வில்லையா ? அப்படியென்றால் என்னேயும் யாரும் உயிரோடு பார்க்க முடியாது” என்று நான் அடித்துப்பேசி, அவர்கள் போட்ட அதிர்வேட்டுக்கு ஓர் எதிர்வேட்டு கிளப்பினேன். மூவரும் திகைத்துப்போர்ைகள். வாய் திறக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/176&oldid=656022" இலிருந்து மீள்விக்கப்பட்டது