பக்கம்:மலர் மணம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 மலர்

போது நான் தலையை கட்டுக்கொண்டேன். உட்காரு தம்பி என்று சொல்லிக் காளியப்பன் ஒரு நாற்காலியைக் காட்டினர். நான் உட்காரவில்லை. பிறகு பாண்டி யனும் அதேபோல் கையால் சைகை காட்டினர். அப்பொழுதும் நான் உட்காரவில்லை. அவர் அவ்வளவு தூரம் இறங்கிவருவார் என்று நான் எதிர்பார்க்கவே யில்லை ?

“நான் அன்றைக்கு உங்களை என் அறியாமை காரணமாக எதிர்த்துக்கொண்டேன். அப் பெரும்பிழை. யைத் தயவுசெய்து மன்னிக்க வேண்டுகிறேன். அதற்காக என்ன தண்டனை கொடுத்தாலும் இன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் காலில் விழவும் தயாராயிருக் கிறேன்” என்று சொல்லிக்கொண்டே நான் பாண்டியனே நெருங்கினேன்.

உடனே பாண்டியன் எழுந்து நின்று, வேண்டாம் வேண்டாம் ! என்காலில் நீங்கள் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டாம் ! நான்தான் உங்கள்காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும். நீங்கள் என்காலில் விழுந்தால்தான் உங்கள் தங்கையை மணந்துகொள்வேன் என்று சொல்லியனுப்பியது என்னவோ உண்மைதான் ! ஆனால், உங்களின் உயர்ந்த பண்பினே-தங்கைக்காக நீங்கள் செய்யத்துணிந்த தியாகத்தினை இப்போது காளியப்பன் வந்து சொன்னவுடன் என் மனம் முற்றிலும் மாறிவிட்டது. ஏமாற்றம் காரணமாக இடையிலே ஏற்பட்ட எனது அரக்க உணர்வு அடியோடு அழிந்து விட்டது. உங்கள் உயர்குணம் அறியாது நான்தான் அன்று உங்களை வம்புக்கிழுத்து முதலில் தாக்கி விட்டேன். அதற்காக நான்தான் உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும். முதலில் பார்த்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/178&oldid=656185" இலிருந்து மீள்விக்கப்பட்டது