பக்கம்:மலர் மணம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 177

என்னையே மணந்துகொள்ள வேண்டும் என்ற நோன்பு கொண்டுள்ள கற்புக்கரசி கற்பகத்தை என் மனைவி யாகவும், தியாகத்தின் திரு உருவமாகிய உங்களை என மைத்துனராகவும் பெறுவதற்கு நான் எவ்வளவோ தவம் செய்திருக்க வேண்டும்” . -என்று சொல்லிக் கொண்டே என்னே மார்போடு மார்பு ஆரக்கட்டித் தழுவிக்கொண்டார். நான் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்துப்போனேன். அந்த நேரம் பார்த்து வந்த காஃபியை அருந்தினுேம். அந்தக் காஃபி திருமண விருந்தாகவே எனக்கு இனித்தது.

வெற்றியுடன் திருமண ஏற்பாடு வேகமாக நடக்கத் தொடங்கியது. மணமக்களின் பெற்றாேர்கள் மகிழ்வுடன் கூடிப் பேசினர். ஆல்ை இடையிலே ஒரு சிறு இடையூறு தலைகாட்டியது.

என்னைப் போலவே-கற்பகத்தைப் போலவே பாண்டியனும் தாய்மொழிப் பற்று மிக்கவர்-மறுமலர்ச்சி உள்ளம் உடையவர். எனவே, வடமொழிச் சடங்கு கொண்டு தம் திருமணத்தை நடத்தக்கூடாது; தமிழ் மணமாகவே தம் திருமணம் திகழவேண்டும் என்ற விண்ணப்பத்தைத் தம் தந்தையாரிடம் செலுத்தினர். அதேபோல் நானும் கற்பகமும் எங்கள் தந்தையாருக்கு விண்ணப்பம் போட்டோம். அவர்கள் இருவரும் எங்கள் விண்ணப்பங்களைக் கிழித்துக் குப்பைத் தொட்டி யில் போட்டு விட்டார்கள். மொழிப்பகையோ-சாதிப் பகையோகூடாது என்று திருவாய் மலர்ந்து எங்களுக்குப் பல அறிவுரை வழங்கினர்கள். “நாங்கள் எந்தச் சாதியா ரையும் வெறுக்கவில்லை. நமக்குப் புரியக்கூடிய நமது தாய்மொழியிலேயே நமது நிகழ்ச்சியை நடத்தவேண்டும். என்பதுதான் எங்கள் குறிக்கோள். எந்தச் சாதியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/179&oldid=656186" இலிருந்து மீள்விக்கப்பட்டது