பக்கம்:மலர் மணம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 மலர்

வேண்டுமானலும் இந்தத் திருமணத்தை நடத்திவைக்க லாம்-ஆல்ை தமிழ்மொழியில் நடத்தவேண்டும்” என்று எவ்வளவோ நாங்கள் எடுத்துச் சொன்னுேம். அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘ தமிழ்த் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்குச் சொத் துரிமை இல்லாது போலுைம் போகலாம்” என்று கூறி அவர்கள் மிரட்டினர்கள். தம் அன்னைக்காக-அன்னே மொழி அருந்தமிழுக்காகச் சொத்துமட்டுமா-தம் உயிரை யுமே விட்டுக் கொடுக்கலாமே ! அன்னையை மாய்த்து அடையும் சொத்து ஒரு சொத்தா ? பிறக்கப்ப்ோகும் பிள்ளைகள் என்ன பேடிகளா, தம் முன்னேர் சொத்தில் வாழ ?'தங்கள் சொந்த முயற்சியில் பொருள் ஈட்டிப் பிழைத்துக் கொள்வார்கள். எனவே, “ தமிழ்த் திருமணமே தேவை” என்று எடுத்து மொழிந்தோம்.

எங்கள் முயற்சி விழலுக்கு இறைத்த நீராயிற்று. கிழவர்கள் இருவரும் விடாக்கண்டர்களாய் இருந் தார்கள். அவர்களது குரங்குப் பிடியால், கூடிவந்த திருமணம் தடைப்பட்டுவிடும் போல் தெரிந்தது. வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில் தாழி உடையும் படி விட்டுவிடலாமா ? எப்படியாவது விட்டுக் கொடுத்துப் பிள்ளைகளைச் சரிகட்டிப் பெரியவர்கள் காரியம் முடிப்பார்கள் என்று சொல்வது வழக்கம். ஆல்ை இங்கேயோ, பெரியவர்களைச் சரிகட்டுவதற் காகப் பிள்ளைகள் விட்டுக்கொடுத்துக் காரியம் முடிக்க வேண்டிய இரங்கத்தக்க நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நானும் பாண்டியனும் மீண்டும் கலந்து பேசினுேம். முலை வாங்கும் முரட்டு மாடுகளைச் சற்று விட்டுக் கொடுத்துத்தான் திருப்புவது வழக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/180&oldid=656188" இலிருந்து மீள்விக்கப்பட்டது