பக்கம்:மலர் மணம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 மலர்

“என்ன காரியம் செய்தாய் அல்லி ! தற்கொலே செய்து கொள்வது அறியாமை-கோழைத்தனம் என்று நான் முன்பே ஒருமுறை உனக்குச் சொல்லி யிருக் கிறேனே. நமக்கு வாழத் தெரியவில்லை யென்றால், சமூகத்தின்மேல் குற்றங்குறை கூறுவதில் யாது பயன்?” ‘சமூகத்தில் வாழ்வு பெறமுடியாத எனக்குத் தற் கொலை செய்து கொள்ளக்கூட உரிமையில்லையா ?”

‘இல்லை-உனக்கு உரிமை இல்லை-தற்கொலே செய்து கொள்ள உனக்கு உரிமையே இல்லை. சமூகத்தின் உதவியின்றி எந்தத் தனி மனிதரும் தாமாகவே உயிர் வாழ முடியாது. எனவே, சமூகத்தின் ஒத்துழைப்பால் வளர்ந்து வரும் உயிர் சமூகத்திற்கே சொந்தமானது. அது எந்தத் தனி மனிதருக்கும் சொந்தமானதன்று.” சமூகத்தின் மாபெரும் நன்மைக்காக வேண்டுமானுல் அந்த உயிரைத் தியாகம் செய்யலாமே தவிர, தம் சொந்த விருப்பு வெறுப்பு காரணமாக, சமூகத்தின் சொத்தாகிய அந்த உயிரைப் போக்கிக்கொள்ள எந்தத் தனி மனித ருக்கும் உரிமையில்லேதான். நீ செய்தது முற்றிலும் முட்டாள்தனம்.’ * * -

‘உண்மைதான் அத்தான்! சமூகத்தின் உழைப்பால் தான் உண்டு உடுத்து வளர்ந்து வந்தேன். ஆனல் அந்தச் சமூகம் இப்போது எனக்கு வாழ வழிகாட்டவில்லையே ?” ‘ வர்ழ்க்கை ஒரு போராட்டம். சமூகத்தோடு சேர்ந்து நாமும் போரிம்டு வெற்றிபெற்றாக வேண்டும்.”

நானும் போராடித்தான் பார்த்தேன். வெற்றி கிட்டவில்லையே.” . -

ஏன், உனக்கு என்ன நேர்ந்தது ? விளக்கமாகச் சொல்லு po

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/186&oldid=656194" இலிருந்து மீள்விக்கப்பட்டது