பக்கம்:மலர் மணம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 185

‘ என்ன ஒன்றும் கேட்காதீர்கள் அத்தான் !”

“நீ சொல்லித்தான் ஆகவேண்டும். வாழப்பிறந்தவள் நீ-வாழ்ந்தே யாகவேண்டும். சொல்லு-விரைவில் சொல்லு!”

‘எனக்கும் பாண்டியனுக்கும் திருமணம் ஏற்பாடாகி யிருந்ததாக நான் உங்களுக்குக் கடிதம் எழுதியிருந் தேனே-நல்ல வேளேயாக அதை அப்பாவே நிறுத்தி விட்டார். அதிலிருந்தே வீட்டில் அமைதியோ-மகிழ்ச்சி யோ இல்லை. அப்பா நடைப்பிணம் போலவே இருந்து வந்தார். கற்பகத்திற்கும் பாண்டியனுக்கும் திருமணம் ஆனபின், தாம் ஏமாந்து விட்டதாக அப்பா மேலும் சோர்ந்து போர்ை. எல்லோரிடமும் எரிச்சலும் புகைச் சலுமாய் நடந்துவந்தார். நீ தொடக்கத்திலேயே “தீகிமித்த'மாய்த் தடுத்ததால்தான் கடைசிவரையும் காரியம் கைகூடவேயில்ஃப் என்று என்னே அடிக்கடிக் கருக்கிக் கொட்டினர். அவர் என்னைப் பார்க்கும் போதெல்லாம் கொன்று விடுவார்போல் தெரிந்தது. அவர் குரலைக் கேட்டாலேயே நான் நடுங்கிச் சாவேன். அவர் கண்முன் நான் தலைகாட்டுவதே கிடையாது. இந்த நிலையில் நான் எப்படி உயிர்வாழ்வது? ஒரு பெண் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்று நீங்களே எண்ணிப் பாருங்கள் அத்தான் !”

‘ஊம், அப்புறம் என்ன ஆயிற்று ?”

 --

வாழ்வதா-சாவதா? என்று நான் தத்தளித்துக் கொண்டிருந்தேன். இந்த நிலையிலும் அப்பா எங் கெங்கோ மாப்பிள்ளை பார்த்துக்கொண் டிருந்தார். ஒருவனுக்கு உறுதியாகித் தவறிவிட்ட பெண் எங்களுக்கு வேண்டாம் என்று எல்லா மாப்பிள்ளே வீட்டுக்காரர்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/187&oldid=656195" இலிருந்து மீள்விக்கப்பட்டது