பக்கம்:மலர் மணம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 மலர்

மறுத்துவிட் டிருக்கின்றனர். கடைசியாக ஒருவன் கட்டிக்கொள்வதாக வந்திருக்கிருன். அவன் முதல் மனைவியை இழந்தவனம்-பிள்ளைகளும் இருக்கிறார் களாம்-ஆல்ை பெரிய பணக்காரனம். அப்பா ஒத்துக் கொள்வாரோ-மாட்டாரோ-எனக் குத் தெரியாது. அத்தானத்தவிர வேறு எந்த மாப்பிள்ளே இனி ஏற்பாடானலும் இறந்துவிடவேண்டும் என்ற முடிவுக்கு கான் எப்பொழுதோ வந்துவிட்டேன். காலத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்த நான், இப்போது இங்கே இந்த நிலைக்கு ஆளானேன். என் உயிரைக் காப்பாற்றிய அத்தானே இனி என் உயிருக்குப் பொறுப்பாளி என்னை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.” -

என்று சொல்லிக்கொண்டே அல்லி என் மார்பிலே தலையைப் புதைத்துக் கொண்டாள். ‘ ஏற்றுக் கொள் கிறேன். அல்லி ! இனி யாரும் நம்மைப் பிரிக்க முடியாது ; இயற்கையே நம்மை ஒன்றுசேர்த்து விட்டது” என்று சொல்லி, நான் அவளேக் கட்டித் தழுவிக்கொண்டேன். உணர்ச்சி வயப்பட்ட எங்களுக்குச் சிறிது நேரம் ஒன்றுமே தெரியாதுதான் !

திடீரெனப் பக்கத்தில் பேச்சுக்குரல் கேட்டதுதிரும்பிப்பார்த்தேன். மாமா மலைபோல் நின்றுகொண் டிருந்தார். அத்தையும் அவரருகில் காணப்பட்டார்கள். அல்லி வீட்டில் இல்லாததை எப்படியோ தெரிந்து தேடிக்கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் க ளே க் கண்டதும், அல்லி புள்ளிமான் போல் துள்ளி எழுந்து ஒருபுறம் ஒதுங்கி நாணத்தால் தலைகவிழ்ந்து நின்றாள். வாரியடித்துக் கொண்டு நானும் எழுந்திருக்க முயன் றேன்-ஆல்ை முடியவில்லை. எனது உள்ளங்கால் ஒன்றை ஏதோ இரும்போ-கருங்கல் சக்கையோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/188&oldid=656196" இலிருந்து மீள்விக்கப்பட்டது