பக்கம்:மலர் மணம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 மலர்

மாமா வீட்டிற்கு நேரே வந்ததும், வண்டியோட்டி வண்டியை நிறுத்தின்ை. ‘நிறுத்தாதே-நேரே நம் மைத்துனர் அம்பலவாண முதலியார் வீட்டிற்கு ஒட்டு ‘ என்று மாமா ஆணேயிட்டார். எங்கள் வீட்டுக்கு மாமாவும் அத்தையும் அல்லியுடன் வரப்போவதை அறிந்ததும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. அந்த மகிழ்ச்சியில் என் கால்வலி பறந்துவிட்டது. ஆல்ை, அந்த அற்ப மகிழ்ச்சியும் நிலைக்கவில்லை. ஒருவேளை, மாமாவைக் கண்டதும் அப்பா வம்புக்கு இழுப்பாரோஎன்னவோ ! ‘நல்லபடியாக அனுப்பிய எங்கள் பிள்ளையை இந்த நிலையில் கொண்டுவந்து இறக்கி விட்டாயே என்று மாமாவோடு அப்பா மல்லுக்கு நிற்பா ரோ-என்னவோ என்று கலங்கினேன். இருக்கட்டும் எப்படியாவது எல்லோரும் எங்கள் வீட்டுக்கு வந்தால் அதுவே போதும்!

இதற்குள்ளேயே எனக்கு இவ்வளவு மனக் கோட்டையா? மாமா அல்லியையும் அத்தையையும் அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டிற்குள் நுழைவார் என்பது என்ன உறுதி என்னே மட்டும் எங்கள் வீட்டு வாயிற்படியில் இறக்கிவிட்டு, த | ங் க ள் அதே வண்டியில் அந்தக்கணமே தங்கள் வீட்டிற்குத் திரும்பிவிட்டாலும் திரும்பிவிடலாம் அல்லவா? அதுதான் நடக்கப்போகிறது என்று எண்ணியபடியே சென்றேன்.

வண்டி எங்கள் வீட்டு வாயிற்படியில் வந்து நின்றது. இன்னும் பொழுது விடியவில்லை. கதவு சாத்தியே இருந்தது. மாமா வண்டிக்காரனேவிட்டுக் கதவைத் தட்டச் செய்தார். அப்பா கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார். மாமாவும் வண்டியோட்டியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/190&oldid=656199" இலிருந்து மீள்விக்கப்பட்டது