பக்கம்:மலர் மணம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 189

என்னைத் தாங்கிப் பிடித்தபடி வண்டியிலிருந்து அழைத்து வந்தார்கள். அப்பா என்னைக் கண்டதும், அழகா! உனக்கு என்னடா வந்தது ? அன்றைக்கு அடித்து அனுப்பியதுபோல் இன்றைக்கும் ஏதாவது செய்துவிட் டார்களோ ?” என்று அலறினர். ‘ அண்ணு அழக னுக்கு ஒன்றும் நேர்ந்துவிடவில்லை. பதருதிர்கள். உள்ளே வாருங்கள், எல்லாம் சொல்லுகிறேன்” என்று கூறி, அத்தை அப்பாவின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துக்கொண்டு போனுர்கள். மாமா உட்பட எல்லோருமே உள்ளே நுழைந்தோம். அதற்குள் அம்மாவும் கற்பகமும் ஓடிவந்து அப்பாவின் அலறலோடு போட்டி போட்டார்கள். இந்தக் குழப்பத்திலும் வர வேற்பு நிற்கவில்லை. அப்பா அத்தையையும், அம்மா மாமாவையும், கற்பகம் அல்லியையும் சிறப்பாகவும், எல்லாருமே எல்லாரையுமே பொதுவாகவும் வர வேற்றது என் கண்ணுக்கும் காதுக்கும் எட்டியது. நீண்டநாள் வராதிருந்து வந்தவர்கள் அல்லவா ! குருதித் தொடர்பு-இரத்தபாசம் விடுமா ?

புகைவண்டித் தடத்தில் நடந்தவற்றையெல்லாம் அத்தை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சொன்னர்கள். இதுவரை நடந்தவற்றை மறந்து, இனி நடக்கவேண்டி யதைக் கவனிக்கும்படி அத்தை (தன் அண்ணுவாகிய) அப்பாவுக்கும், அம்மா (தன் அண்ணுவாகிய) மாமா வுக்கும் வேண்டுகோள் விடுத்தார்கள். அவர்களின் முயற்சி வீண் போகவில்லை. மைத்துனரும் மைத்துனரும் கூடிக்கொண்டார்கள். ஒருவரையொருவர் மன்னித்து

உறவு கொண்டாடினர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/191&oldid=656200" இலிருந்து மீள்விக்கப்பட்டது