பக்கம்:மலர் மணம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 மலர்

அல்லி வேறு-இந்த அல்லி வேறு ! புகைவண்டித் தடத் தில் என்னைக் கட்டிப் புரண்ட அந்த அல்லி வேறுஇந்த அல்லி வேறு அந்த அல்லிகள் ஆயிரவர் வரினும் இந்த அல்லிக்கு இணையாகார். அந்த அல்லியின் புதுப் பிறவி இந்த அல்லி! எங்கிருந்துதான் அவள் இந்தப் புதுத்தோற்றம்-புத் து ண ர் வு பெற்றாளோ ? இது இயற்கையோ-அல்லது அவளாகச் செய்துகொண்ட செயற்கையோ? இதற்கு முன்பு அவள் என்ைேடு பழகி யவள் என்பதை யாராலும் நம்ப முடியாது-ஏன், என் ேைலயே நம்பமுடியவில்லையே. “இந்தப் பூனேயும் பால் குடிக்குமா ? இது தேவ உலகமோ பூவுலகமோ ?” என்று சொல்கிற முறையில், ஒன்றும் அறியாதவள்போல் நாணிக் கோணி என் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். அப்பப்பா ! இந்தப் பெண்களின் பொடி வேலைத் திறத்தை யாரால் புரிந்துகொள்ள முடியும் ?

இன்னியம் கறங்க மங்கல வாழ்த்துக்களுடன் எங்கள் தமிழ்த் திருமணம் இனிது நிறைவெய்தியது. இனி நானும் அல்லியும் வெறும் மைத்துன-மைத்துணி முறையினர் அல்லர் ; கணவன் மனைவியாகிவிட்டோம். அவள் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவளாகி விட்டாள்.

இதற்குமுன் தனித்திருந்த நானும் அல்லியும் இப் பொழுது கட்டுண்டு விட்டதால், எங்கள் வாழ்க்கையில் -நடையுடை போக்கில் பெரிய மாறுதல் ஏற்படலாம் என்று எண்ணியிருந்தேன். ஒருத்தி ஒரு வ னு க் கு வாழ்க்கைப் பட்டுவிட்டால், அவள் அவனுக்கு அடிமை யாகி விட்டதாகவும், அவளது உரிமை பறிபோய் விட்டதாகவும் உரைப்பது உலக இயல்பு. நான் ‘இன்டர்மெடியட் வகுப்பில் படித்த “ தி லேடி வித் எ 69tribu’, “ (The Lady with A Lamp) 6T6:rgyth offi'6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/194&oldid=656203" இலிருந்து மீள்விக்கப்பட்டது