பக்கம்:மலர் மணம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 195.

பெண் வைத்துக்கொண் டிருப்பவர்கள், எப்படியாவது நாள் கடத்தாமல் கட்டிக்கொடுத்து விடவேண்டும் என்று பறக்கிறார்கள் போலும் !

சில பெண்கள் தாலி கட்டிக்கொண்டு கணவன் வீடு வந்ததும் பெருமையடித்துக் கொள்வார்கள்-பேயாட்டம் ஆடுவார்கள். இந்நிலையில், என்னேயும் எங்கள் குடும் பத்தையும் அல்லி என்ன பாடு படுத்த இருக்கிருளோ என்று எண்ணியிருந்தேன். ஆனல் அவள் எந்த உரிமை யும் எடுத்துக்கொண்டவளாகக் காணப்படவில்லை. நாங்களாக வலிய அவளுக்கு எவ்வளவோ உரிமைகள் கொடுத்தும், அவள் அடங்கியே-அமைதியாகவே நடந்து கொண்டாள். வள்ளுவர் கூறிய வாழ்க்கைத் துணை நலப் பண்புகள் அனைத்தும் அவளிடம் அப்படியே படிங் திருக்கக் கண்டு செருக்குற்றேன். இது எனது நற்பேறே ! .

கற்பகம் கணவ்ன் வீடு சென்றதிலிருந்து அம்மா தனியே உழன்றுகொண் டிருந்தார்கள். இப்போது அல்லி வந்தது அவர்களுக்கு எவ்வளவோ துணையாயிற்று. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வேண்டிய பணிவிடைக ளெல்லாம் அவள் தட்டாது செய்துவந்தாள். ஆனல் ஒருவகையில் என்னைத்தான் ஏய்க்கத் தொடங்கிள்ை.

திருமணம் ஆவதற்கு முன்பு என்னிடம் உரிமை கொண்டாடினுள்-எனக்குக் கடிதமும் எழுதினுள்-- என்னேயே மணந்து கொள்ளவேண்டும் என்று வெளிப் படையாகப் போராடியும் வந்தாள். திருமணத்துக்கு முந்தியே நம்மிடம் இவ்வளவு தெளிவாகப் பழகுபவள், திருமணம் ஆனபின் இன்னும் தெளிவாக-வெளிப்படை யாக நெருங்கிப் பழகுவாள்’ என்று அப்போதெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/197&oldid=656205" இலிருந்து மீள்விக்கப்பட்டது