பக்கம்:மலர் மணம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 197

பேசி, சிரிக்கவேண்டியதற்குச் சிரித்து, இன்பம் அளிக்க வேண்டிய இடத்தில் அளித்துக் களிப்பூட்டி மகிழ்வித்து என் உள்ளத்தைக் கொள்ளே கொண்டு வந்தாள் என் அழகு அல்லி !

வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை” என்றார் வள்ளுவர். அல்லி அதை வாழ்க்கையில் கடைப் பிடித்தவள் போல் காணப்பட்டாள். நகைகளைப் போட்டுக்கொண்டே யிருக்கும்படி அம்மா சொல்லு வார்கள். அதற்கு அவள், ‘ நான் என்ன அலங்காரப் பதுமையா ? கணவனது செல்வத்தின் அ ள ைவ அறிவிக்கும் விளம்பர சாதனமா கான் ? கண்ணில் குறை உள்ளவரே கண்ணுடி அணிவர் ; அதுபோல, தம் தகுதி திறமையில் குறையுடையவரே நகை அணிந்து ஈடுகட்ட வேண்டும் ” என்று கூறுவாள்.

நாங்கள் இருவரும், என் பெற்றாேர்க்கு ந ல் ல மகனுகவும் நல்ல மருமகளாகவும் நடந்து கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்து வந்தோம். என் படிப்பறிவை, அலுவலகத்துக் கணக்கு வேலைக்குப் பயன்படுத்தாமல், எங்கள் பண்ணே வேலைக்கே பயன்படுத்தி வந்தேன். பயிர்த்தொழிலிலும் நல்ல வருவாய் ! குடும்பத்திலும் பெரிய மகிழ்ச்சி ! -

திருமணத்தைப் போலவே பிள்ளைப் பேற்றிலும் கற்பகமும் பாண்டியனும் எங்களே முந்திக்கொண் டார்கள். திருமணம் ஆன மறு ஆண்டே கற்பகத்துக்கு மகன் பிறந்தான். பாண்டியன் தம் மகனுக்கு மாறன் என்று பெயர் சூட்டினர். வரலாற்றின்படி பார்த்தாலும் பாண்டியன் மகன் மாறன் தானே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/199&oldid=656207" இலிருந்து மீள்விக்கப்பட்டது