பக்கம்:மலர் மணம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 மலர்

அவர்களுக்குக் குழந்தை பிறந்ததும், உறவினர்களும் நண்பர்களும் என்னையும் அல்லியையும் கேலி செய் தார்கள். அவர்கள் கெட்டிக்காரர்களாம் - பிள்ளை பெற்று விட்டார்களாம் ! நாங்கள் அப்படி இல்லையாம். யாராவது எங்களே இப்படிக் கிண்டல் செய்யும்போது, அல்லியின் முகத்தைப் பார்க்க வேண்டுமே! இன்னும் எங்களுக்குப் பிள்ளே பிறக்கவில்லையே என்று அப்பாவும் அம்மாவுங்கூட இறக்கை கட்டிப் பறந்தார்கள்.

இரண்டு ஆண்டுகள் கழித்து அல்லி கருவுற்றாள். எங்கள் குடும்ப வழக்கப்படி ஒன்பதாவது மாதத்தில் சூல் விழாவிற்கு ஏற்பாடு செய்தார்கள். விழா புக்க கத்தில் நடைபெறும். பிறந்தகத்திலிருந்து பெண்ணுக்கு ஏராளமான சீர் வரிசைகள் வருவது வழக்கம். சிற்றுண்டி வகைகள்-பழவகைகள்-காப்பரிசி-தேங்காய்-வெற். றிலே பாக்கு-கற்கண்டு-மலர்வகைகள்- ஆடைகள்அணிகலன்கள் - பல்வகைப் பாத்திரங்கள் முதலியன பெண்ணின் பெற்றாேரால் கொண்டு வரப்படும். பிள்ளை வீட்டிலும் எண்ணிறந்த பொருள்கள் தயாரித்து வைத் திருப்பார்கள். -

சூல் விழாவிற்கு முதல் நாளே எங்கள் வீட்டில் ஒரே கொண்டாட்டமாய் இருந்தது. வெளியூர்களி லிருந்து உறவினர் பலர் வந்திருந்தனர். வீடு அமர்க்களப் பட்டது.

அன்றிரவு நானும் அல்லியும் வெகு நேரம்வரை தூங் காமல் மகிழ்வுடன் பேசிக்கொண்டிருந்தோம். ஏனெனில் நாங்கள் மீண்டும் இதுபோல் கலந்து உரையாட இன்னும் ஐந்தாறு மாதம் ஆகக் கூடும். மறுநாள் காலை சூல்விழா -நண்பகல் விருந்து-பிறகு மாலேயில் அல்லியை அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/200&oldid=656209" இலிருந்து மீள்விக்கப்பட்டது