பக்கம்:மலர் மணம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 மலர்

“விளையாடாதீர்கள் அத்தான்! உங்களுக்கு எந்தப் பிள்ளை பிற ந் த ல் மிகவும் விருப்பம் என்று சொல்லுங்கள் !”

“ உனக்கு எந்தப் பிள்ளை பிறந்தால் விருப்பமோஎனக்கும் அதேதான்!” -

‘ எனக்குப் பெண்பிள்ளை பிறந்தால் மிகவும் விருப்பம்!” -

‘ எனக்கும் அப்படித்தான் ? எப்போதுமே நம் இருவர் விருப்பமும் ஒன்றுதானே !’

‘ அத்தான் ! நம் பெண்ணே நன்முகப் படிக்கவைக்க வேண்டும். நம் பெற்றேர்கள் நமக்குத் தொடக்கத்தில் இடையூருக இருந்ததுபோல் இல்லாமல், அவள் விருப்பப்படி திருமணம் செய்துவைக்க வேண்டும். அவளுடைய அத்தான் மாறனேயே - கற்பகத்தின் மகனைத்தான் சொல்கிறேன்-கட்டிக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அவளே அவனுக்கே மணம் செய்து வைக்கவேண்டும், தெரியுமா ?”

“ அல்லி அல்லி, நிறுத்து யாராவது கேட்டால்

சிரிக்கப் போகிறார்கள் பெண் பிறக்கட்டும்-பிறகு பேசிக்கொள்வோம்’.

“அத்தான்! நான் என் வீட்டுக்குப்போன பிற்பாடு, நீங்கள் அடிக்கடி வந்து பார்ப்பீர்களா அத்தான் ?”

‘ என்ன ! உன் வீடா ! இதுதான் உன் வீடு அது உன்தாய் வீடு. இன்னுமா உனக்குப் பழைய பற்று நீங்கவில்லை ?”

‘ சொல்லுங்கள் அத்தான், நான் போனவுடனே வந்து பார்ப்பீர்கள் அல்லவா ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/202&oldid=656211" இலிருந்து மீள்விக்கப்பட்டது