பக்கம்:மலர் மணம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 201

“உடனே வந்து பார்த்தாலும், அடிக்கடி வந்து பார்த்தாலும், இவன் ஒரு பெண்டாட்டிதாசன்பெண்டாட்டியைப் பிரிந்திருக்க இவல்ை முடியவில்லைஎன்று எல்லோரும் என்னைக் கேலிசெய்வார்களே அல்லி! அதல்ை, உடனே வரமாட்டேன். உனக்குக் குழந்தை பிறந்த பிறகுதான் வருவேன்-அதுவும் எப்பொழுதோ ஒருமுறைதான் வருவேன்’.

‘ எனக்காக வரமாட்டீர்கள்-உங்கள் குழந்தைக் காகத்தான் வருவீர்கள் போலும் ! உங்கள் பிள்ளைமேல் இருக்கும் அன்பு என்மேல் இருக்குமா ? நான் என்ன, உங்கள் பிள்ளையைவிட உங்களுக்கு உயர்ந்தவளா ?”

‘ பிறப்பதற்கு முன்பே, பிள்ளைமேல் பொருமை கொண்டு போட்டிக்கு வந்து விட்டாயே அல்லி ! இதோ பார் அல்லி - இப்போதே சொல்லி விடுகிறேன்இனிமேல் எனக்கும் உனக்கும் என்ன கிடக்கிறது ? இனி எனக்குப் பிள்ளைதான் பெரிது! இனிமேல் நான் உன்னேக் கவனிக்க மாட்டேன்-என் பிள்ளையைத்தான் கவனிப்பேன் ‘. -

‘ அத்தான் ! நீங்கள் விளையாட்டுக்குச் சொல்லு கிறீர்கள் என்றுதான் நினைக்கிறேன்-அதே நேரத்தில், அது பலித்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். அத்தான் !”

“ பைத்தியமே நான் இருக்கும்போது எதற்காக நீ அஞ்ச வேண்டும்?”

‘ என்னவோ அத்தான் ? எனக்கு ஒரே திகிலாக இருக்கிறது. நான் வாயும் வயிறுமாக உங்களை விட்டுப் பிரிந்துபோகிறேன். மீண்டும் நல்லபடியாக உயிரோடு வந்து உங்களை அடைய வேண்டுமே ! - உங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/203&oldid=656212" இலிருந்து மீள்விக்கப்பட்டது