பக்கம்:மலர் மணம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 மலர்

குழந்தையை உங்களிடம் கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டுமே! எனக்கு அச்சமாக இருக்கிறது”.

“இதில் என்ன அச்சம்! நீ திரும்பவும் வந்து என்னை அடையாமல் எங்கே போய்விடப் போகிறாய் ? எந்தக் காரணத்தாலும் நாம் எப்போதும் பிரியவே மாட்டோம். இந்த ஐந்தாறு மாதப் பொழுதைமட்டும் எப்படியாவது கழித்துவிட்டு வந்துவிடு ‘

“ சிறிது காலம்கூட உங்களை விட்டுப் பிரிந்திருக்க என்னுல் முடியவே முடியாது அத்தான் ! நீங்களும் என் கூடவே வந்து என் பக்கத்திலேயே இருங்கள்! இல்லா விட்டால், நான் தாய்வீட்டிற்குச் செல்லாமல் இங்கேயே தங்கிவிடுகிறேன்--இங்கேயே குழந்தை பிறக்கட்டும்!”

‘ ஐயோ அல்லி அல்லி! பெண்மனம் என்று சொல்லு கிறார்களே, சரியாகத்தான் இருக்கிறது. நான் உன்னுடன் வந்து இருக்க முடியுமா? வேண்டுமானல், நீ இங்கேயே தங்கிப் பிள்ளைப்பேறு பார்த்துக்கொள்ள லாம். அதில் எனக்கு இரட்டை மகிழ்ச்சி. ஆல்ை நம் பெற்றேர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்களே ! நம் குடும்ப வழக்கப்படி, முதல் பிள்ளைப்பேறு தாய்வீட்டில் ஆல்ைதான் குடும்பம் வளர்ச்சியடையும் என்ற குருட்டு நம்பிக்கை அவர்களை விட்டுப் போகுமா ? எனவே, நீ தயங்காமல் மயங்காமல் போய்வா உள்ளுர்தானே ! நானும் நடு நடுவே வந்து பார்க்கிறேன் ”.

“ சரி, போகிறேன். அத்தான் !”

ப்ோகிறேன் என்று சொல்லாதே போய் வருகிறேன் என்று சொல்லு ‘

“ ஆகட்டும் அத்தான் !”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/204&oldid=656213" இலிருந்து மீள்விக்கப்பட்டது