பக்கம்:மலர் மணம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 205

தனக்கு முதல் மதிப்பு (மரியாதை) கிடைக்கவில்லையாம் ; முத்தைய முதலியாருக்குத்தான் முதல் மதிப்பு கொடுக்கப்பட்டதாம். இவ்வளவும் மாமாவின் குற்றச் சாட்டு. -


நீ உன் பெண்ணுக்கு என்ன பெரிய சீர் செய்து விட்டாய்? நீ உன் தங்கைக்கு என்ன செய்திருக் கிறாய் ? நீ உன் தங்கைக்குச் செய்திருப்பதைவிட நான் என் தங்கைக்குச் செய்திருப்பது ஒன்றும் குறைந்து விடவில்லை ” என்றெல்லாம் அப்பாவும் மாமாவும் குறை கூறிக்கொள்ளும் அளவுக்கு நிலைமை முற்றிவிட்டது.

நானும் அம்மாவும் எத்தனையோ, காரணங்காட்டி எவ்வளவோ அமைதி செய்தும், எவ்வளவோ கெஞ்சிக் குழைந்து கூத்தாடியும் மாமா ஒத்துக்கொள்ளவேயில்லை; விருந்துக்கு வர மறுத்தவர் மறுத்தவர்தான். அவர் இல்லாமலேயே விருந்து முடிந்தது. அவர் உண்ணுத தால், அப்பாவும் உண்ணவில்லை-அம்மாவும் உண்ண வில்லை. அல்லியை அழைத்துக்கொண்டு போவது என்ற ஒரு கடமை இருந்ததால் அவர் இங்கே தங்கினர்இல்லாவிட்டால் எப்பொழுதோ தம் வீட்டுக்கு ஒடிப் பேர்யிருப்பார்.

“எங்கள் வீட்டு நிகழ்ச்சியில்மட்டுமா இந்தப்பிணக்கு ஏற்பட்டது ? இதுபோல் எண்ணற்ற இல்லங்களில் நல்ல காரியம் நடக்கும்போது இத்தகைய கோணல்கள் குறுக்கிட்டிருக்கின்றன. அப்பப்பா ! இந்த மனிதமங்தை என்றுதான் திருந்துடிோ ?” -

உரிய நேரம் வந்ததும் உருக்கத்துடன் அல்லி பயணம் சொல்லிக்கொண்டாள். அவளே அழைத்துக் கொண்டு அத்தையும் மாமாவும் தம் இல்லம் ஏகினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/207&oldid=656216" இலிருந்து மீள்விக்கப்பட்டது