பக்கம்:மலர் மணம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

சில நாட்கள் சென்றதும் அல்லியைக் காணவேண்டும் என்ற ஆவல் மிக்கது. ஒருநாள் மாமா வீட்டிற்குச் சென் றேன். மாமா நடுக் கூட த் தி ல் உட்கார்ந்திருந்தார். அவர் என்னை வரவேற்கவே இல்லே-பேசவும் இல்லை. நான் தயங்கித் தயங்கி நின்றுகொண் டிருந்தேன். என்னைக் கண்ட அத்தையின் தலை ஆடியதே தவிர வாய் பேசவேயில்லை. இது மாமாவின் கண்டிப்பான ஆணை யின் விளைவு எனப் புரிந்துகொண்டேன். நான் கையில் கொண்டு வந்திருந்த மலர்களேயும் பழங்களேயும் மேசை மேல் வைத்தேன். மாமா எழுந்து வந்து அவற்றை வாசலிலே தூக்கி எறிந்துவிட்டார். மருமகப்பிள்ளைக்கு மாமனர் வீட்டில் இவ்வளவு சீரும் சிறப்பும் போதாவா ? இனியும் அங்கு நிற்க மனமில்லை. நான் புறப்படத் திரும்பியபொழுது, கலங்கிய கண்களுடன் நடுக்கட்டில் நின்று என்னையே பார்த்துக்கொண்டிருந்த அல்லியைக் கண்டு தத்தளித்தேன். மேலும் அங்கே நிற்க மறுத்துக் கால்கள் வெளியேறிவிட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/208&oldid=656217" இலிருந்து மீள்விக்கப்பட்டது