பக்கம்:மலர் மணம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207

வீட்டிற்கு வந்து நடந்ததைச் சொன்னேன். இனி மேல் எக்காரணத்தைக் கொண்டும் எப்போதுமே அங்கே போகவேண்டாம் என்று அப்பா எச்சரிக்கை செய்தார். -

அம்மாவுக்குமட்டும் மனம் கேட்கவில்லை. ஒருநாள் அல்லியைப் பார்த்துவரச் சென் ருர்கள். எனக்கு நடக் தது போலவே அவர்களுக்கும் நடந்தது. மேற்கொண்டு இன்னும் ஒன்று கூடுதலாகவும் அம்மாவுக்கு கடந்திருக் கிறது. என்னிடம் வாய் திறவாதிருந்த மாமா, அம்மாவை நோக்கி, ‘ இனி நீங்கள் யாரும் இந்தப் பக்கமே அடி எடுத்து வைக்கக்கூடாது; உங்கள் மரு. மகளே வேண்டுமால்ை இப்பொழுதே அழைத்துக் கொண்டு போய்விடலாம்” என்று கண்டித்துப்பேசி அனுப்பிவிட்டார். அழாத குறையாய் அம்மா வந்து சேர்ந்தார்கள்.

மாமா திருந்திவிட்டார் என்று எண்ணியிருந்தேன்.

மறுபடியும் பழைய குருடி கதவைத் திறடி’ என்ற கதை தான். காய் வால் நிமிருமா ?

மேலும் சிலநாள் சென்றதும், அல்லிக்குக் குழந்தை பிறந்திருப்பதாக அறிந்தோம். அவள் விரும்பியபடியே பெண் குழந்தைதான். இந்த முறை உரிய பொருள் களுடன், அம்மாவும் நானும் சேர்ந்தாற்போல் குழந்தையைப் பார்க்கச் சென்றாேம். முன்பு நடந்த தற்கும் இப்பொழுது நடந்ததற்கும் அணுவளவும் வேற்றுமையில்லை-அதே வரவேற்புதான்-வாய் பேசா வரவேற்புதான் நடந்தது. வீட்டிற்குத் திரும்பிய போதும், முன்போலவே, இனி யாரும் வரவேண்டாம் என்ற மங்கலச் சொற்கள் காதில் விழுந்தன. ஆனல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/209&oldid=656218" இலிருந்து மீள்விக்கப்பட்டது