பக்கம்:மலர் மணம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 19.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எந்தத் தமிழன் இந்தச் சொல்லேப் படைத்தானே ? அல்லி என்னை அழைப்பதற் கென்றே படைத் தானே ? இளமையில் என்னைப் பெயரிட்டே அழைத்து வந்தவள் இப்பொழுதுதான் கடிதத்தின் மூலம் அத்தான் என்று அழைத்திருக்கின்றாள். அதிலும் அத்தான் என்பதற்கு முன்னுள்ள ‘அன்புள்ள” என்னுஞ் சொல், உண்மையிலேயே இதுவரை அவள் மேல் பகையுணர்வு கொண்டிருந்த என்னுள்ளத்தே மின்சாரம் பாய்ச்சுவது போன்று அன்பைப் பாய்ச்சியது. அவள்மேல் கொள்ளேயன்பு பெருகிற்று. அவளும் நானும் இதுவரை காதலர்களாக இருந்திருக்க, அவள் இவ்வாறு அழைத்திருந்தால் கூட இதில் சுவை யிருந்திராது. காரிருளில் மின்னல்போல், பகைமையிடையே இந்த அன்பு வீச்சு பளிச்சிட்டிருக்கிறது. இது, இரத்த பாசத்தின் எதிரொலி என்னலாம் சிலர் ; இல்லையில்லை இளமையின் திருவிளையாடல் என்று கிண்டல் செய்ய லாம் சிலர். என்னேப் பொறுத்தவரை இந்த இரண்டுமே யில்லை. இதற்குக் காரணம், ஆமாம் ஆமாம், என் உள் மனத்தில் தெரிகிறது. அதை வெளியில் சொல்ல வேண்டுமானல், ஐயோ சொல்லத் தெரியவில்லையே, எனக்கே காரணம் புரியவில்லையே! என்னேயும் அறியாத ஏதோ ஒன்று-ஆம் அவ்வளவுதான் !

கல்லூரித்தலைவருக்கு, மூன்று நாளேக்கு விடுமுறை விண்ணப்பம் எழுதிக் கொடுத்து விட்டு, பகல் வண்டிக்கே புறப்பட்டுவிட்டேன்.

ஏன்தான் புகைவண்டி இவ்வளவு மெல்ல நகர் கிறதோ தெரியவில்லை. இதற்கு விரைந்து செல்லும் வண்டி (Express) என்று பெயராம். நான் வண்டி யோட்டியாக இருந்திருந்தால் வண்டியை நான்குகால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/21&oldid=656219" இலிருந்து மீள்விக்கப்பட்டது