பக்கம்:மலர் மணம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208. மலர்

ஒரே ஒரு வேற்றுமை! முன் தடவையில், மாமா உங்கள் மருமகளே அழைத்துக்கொண்டு போய்விடலாம் என்று சொன்னர். இந்தத் தடவையோ, உங்கள் குழந்தையை எடுத்துக்கொண்டு போய்விடலாம் என்று சொன்னர். கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளவில்லை-அவ்வளவு தான் ! அப்பா சொன்னது சரியாய்ப் போயிற்று. இனி அங்கே என்ன வேலை ?

உள்ளத்திலே ஒருவகைத் திகில் உணர்வு எழுந்தது. மீண்டும் நல்லபடியாக வந்து உங்களை அடைவேனே என்று அல்லி அன்றைக்கு அஞ்சியது அடிக்கடி நினைவிற்கு வந்து என்னேயும் அச்சுறுத்தியது.

பிள்ளை பிறந்த ஐந்தாவது மாதத்தில், தாயையும் சேயையும் அழைத்துக்கொண்டு வருவதற்காக, அப்பா வும் அம்மாவும் மாமா வீட்டிற்குச் சீர்வரிசைகளுடன் சென்றார்கள். மாமா அனுப்ப மறுத்து விட்டார். இனி யாருமே வரவேண்டாம்-என்றைக்குமே அனுப் ப முடியாது’ என்று அடித்துப் பேசி விட்டார். ஒரு பெரிய போரே நடத்திவிட்டு என் பெற்றாேர் திரும்பி விட்டனர்.

‘ கடன் பட்டும் பட்டினி-கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி” என்று சொல்லுவார்கள். நானே, பிள்ளை பெற்றும் பிரம்மசாரியாகவே காலம் கடத்தி வந்தேன். எத்தனையேர் பேர்கள் குழந்தைக்காக அருந்தவம் கிடக் கிறார்கள். குழந்தை பிறந்தும், அதை ஆர்வத்தோடு வாரியணைத்து உச்சி மோந்து முத்தம் இட்டு, குதலை மொழி கேட்டுக் கொஞ்சிக் குலவுவதற்கு நான் கொடுத்து வைக்கவில்லை. இதை எண்ணிய போதெல்லாம், என் நெஞ்சம் எரிமலையாகக் குமுறிக் குழம்பியது. இந்த நேரத்தில், என் மருமகன்-கற்பகத்தின் மகன்-மாறன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/210&oldid=656220" இலிருந்து மீள்விக்கப்பட்டது