பக்கம்:மலர் மணம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 மலர்

தட்டிப் பறித்துக் கொண்டார். அடுத்த சுற்று என் னுடையது. இப்படியாக மலர் அடுத்தடுத்துக் கைக்குக் கை மாறிக் கசங்கியே போயிற்று. இறுதியாக இந்தச் சுற்றுமுறை நீடிக்கவில்லை. எங்கள் நால்வருடைய எட்டுக் கைகளும், ஒரே சமயத்தில், மலரை இதழ் இதழாகப் பிய்க்கத் தொடங்கின. முகத்தில் மட்டுமல்ல -உடம்பு முழுவதும் முத்த மாரிகள் பொழியப்பட்டன. கண்ணே-கரும்பே-கற்கண்டே-கனிச்சாறே முதலிய உருவக விளிகள், கவிஞர்களின் கற்பனைகளைக் கடந்து சென்றன.

‘ பாம்பு பசியை நினைக்கிறதாம்-தேரை விதியை நினைக்கிறதாம் ‘ பலநாள் பசித்தவன் பால் சோற்றைக் கண்டதுபோல, நாங்கள் மலரைச் சுவைத்து மகிழ்ந்து கொண்டிருந்தோம். ஆனல் மலரோ, திருதிரு’ என விழித்தாள். ஒவ்வொருவரையும் ஏற இறங்க முறைத்துப் பார்த்தாள். இறுதியில் அம்மாகிட்டே போறேன்-- அம்மாகிட்டே போறேன்’ என்று அடம்பிடித்து அழத் தொடங்கி விட்டாள். என்ன சொல்லியும்-என்ன செய்தும் ஓயவில்லை. மிட்டாய் கொடுத்துப் பார்த்தோம் -பிஸ்கட் கொடுத்துப் பார்த்தோம்-ஒன்றும் நடக்க வில்லை. கைகால்களே உதறிக்கொண்டு, என் அம்மாவின் இடுப்பிலிருந்து கீழே குதித்து, தெருப்பக்கம் ஒடத் தொடங்கினுள். கதவைச் சாத்தித் தாள் இட்டுவிட் டோம். நரிக்குக் கொண்டாட்டமாம்--ரு ண் டு க் குத் திண்டாட்டமாம் என்பது போல, எங்கள் இன்பம் அவளுக்குத் துன்பமாயிற்று.

அந்த நேரத்தில், ஒரு சின்ன விளையாட்டுச் சைகிள் வண்டியில் அமர்ந்து, அதனைச் சுற்றியபடி வாசலில் வட்டமிட்டுக் கொண்டிருந்த மாறனே மலர் பார்த்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/212&oldid=656222" இலிருந்து மீள்விக்கப்பட்டது