பக்கம்:மலர் மணம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 மலர்

அனுப்பும்போது, பெற்றேர்கள் கதறிக் கண்ணிர் வடித்ததைச் சில இடங்களில் நான் கண்டு வியந்திருக் கிறேன். அதிலுள்ள உண்மை (இரகசியம்) இப்போது தான் எனக்குப் புலப்பட்டது. அரைமணி நேரம் வந்து உடனிருந்த மகளேயே என்னுல் பிரிய முடியவில்லையே! பதினைந்து இருபதாண்டுகள் வளர்த்துக் கட்டிக் கொடுத்த பிறகு எப்படித்தான் பிரிந்திருப்பேனே, எனக்கே தெரியவில்லை !

ஆல்ை, மலர் வந்திருந்தபொழுது, இன்னும் அரை மணி நேரத்தில் பிரிந்து போய்விடுவாள் என்ற எண்ணமே எனக்கு வரவில்லை; அவள் என்னவோ காலமெல்லாம் என்னுடன் கழிக்க இருப்பதுபோலவே எனக்குத் தோன்றியது. இது பிள்ளைப்பற்றின் ஒரு கூறு போலும் ! என் மலர் நாடகத்தில் வந்து போவது போல், முகத்தைக் காட்டிவிட்டு ஓடிவிட்டாளே !

இதே ஏக்கமாய் இருந்த என்ன நோக்கி, “சாப்பிட வா தம்பி! மலரையே நினைத்துக்கொண்டிருக்காதே! அவள் இன்ைெருமுறை வருவாள். நம் குழந்தை நம்மிடம் வராமல் வேறு எங்கே போய்விடப் போகிருள்? எழுந்து வா!’ என்று அம்மா என்ன உணவருந்த அழைத்தார்கள். நானும் எழுந்தேன். அப்பொழுது தெரு வாயிற்படியில் மலர் அழுங்குரல் கேட்டது. அம்மா வாய்க்குச் சர்க்கரை கொட்டவேண்டும். அதே ஆள் மலரைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந் தான். மலர் வருவாள்’ என்று அம்மா சொன்னது அப்பொழுதே பலித்துவிட்டது. வந்தவன் விவரம் சொன்னன் :- .

மலர் இங்கே வந்திருந்தபொழுது, அங்கே மாமா வெளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பிவிட்டாராம். மலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/214&oldid=656224" இலிருந்து மீள்விக்கப்பட்டது