பக்கம்:மலர் மணம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 மலர்

அம்மாவிடம் கொண்டுபோய் விடுங்கள் என்று சொல்லி எங்கள் உயிரையே வாங்கிவிட்டாள். குழந்தையைத் தணிவுசெய்து எங்கள் வழிக்குத் திருப்பிக் கொண்டுவர ஒரு மாதத்துக்குமேல் ஆயிற்று.

இப்பொழுது மலர் எங்கள் வீட்டுப் பெண். எப் போதும் என்னுடனேயே இருப்பாள். நான் எங்கே சென்றாலும் என்கூட வருவதற்கு அடம்பிடிப்பாள். அவளே அவ்வளவு செல்வமாக வளர்த்து வந்தேன். அவள்மகிழ்ச்சியிலே அல்லியின் பிரிவுத் துன்பத்தை ஒருவாறு மறந்திருந்தேன். அப்பாவும் அம்மாவுங்கூட, பேரக்குழந்தையோடு பொழுது போக்கி மெய்ம்மறந்து போவார்கள். இப்போது நாங்கள் புதுவாழ்வு தொடங்கி யுள்ளோம் என்றே சொல்லலாம். . . .

“ மனிதர் நூருண்டு வாழவேண்டும்.-இன்னின்ன முறைகளைப் பின்பற்றில்ை அதற்குமேலும் வாழலாம்” -என்று சிலர் பேசக் கேட்டிருக்கிறேன்-எழுதியதைப் படித்திருக்கிறேன்-அதற்காகச் சிலர் முயலுவதையும் கண்டிருக்கிறேன். நான் அ ப் பொழுதெ ல் லாம் பின்வ ரு மாறு நினைப்பதுண்டு : - மனிதன் ஏன் நூருண்டு வாழவேண்டும்? ஐம்பது அறுபது ஆண்டுகள் வாழ்ந்தால்தான் போதாதா? அதற்கும் குறைவாக இருந்தால்தான் என்ன ? நெடுநாள் இருந்து என்ன செய்யப்போகிருன். நேற்று உண்ட உணவுதான் இன்றைக்கும்-கேற்று உடுத்ததுதான் இன்றும்-அதே உறக்கம்தான்-அதே ஆண்பெண் இன்பம்தான்-அதே உழைப்புதான்-அதே அநுபவம்தான். புதிதாக என்ன அநுபவித்துவிடப் போகிருன் ஓரளவு வாழ்ந்து அநுபவித்துப் பார்த்துவிட்டவன் இன்னும் எந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/216&oldid=656226" இலிருந்து மீள்விக்கப்பட்டது