பக்கம்:மலர் மணம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 215

இன்பத்திற்காக இருக்கவேண்டும்? இளைஞர்கள் வேண்டுமானல் இன்னும் எத்துணையோ இன்பங்களே அநுபவிக்க வேண்டும்-அதனல் அவர்கள் இன்னும் உயிர்வாழ வேண்டும் என்று விரும்புவதில் பொருள் உண்டு. எல்லாம் அநுபவித்து விட்ட-ஐந்தடியும் அடித்துப் போரிலே போட்டு விட்ட கிழவர்களுக்கு இன்னும் ஏன் வாழ்க்கை சலிக்கவில்லை ? இவ்வுலகத் திலேயே இருக்கவேண்டும் என ஏன் விரும்புகிறார்கள் ? இறப்பதற்கு ஏன் அஞ்சுகிறார்கள் ?-என்றெல்லாம் நான் பலமுறை எண்ணியதுண்டு-பலரிடம் சொன்னதும் உண்டு.

ஆல்ை இப்பொழுதுதான் உண்மை உணர்ந்தேன். வயதாக வயதாக வாழ்க்கை சலிக்காதிருப்பதில் உள்ள இரகசியம் இப்போதுதான் எனக்குப் புலயிைற்று. அது சரியோ, தவருே-சொல்லிவிடுகிறேன்.

நூருண்டு காலமாக வாழ்ந்து வரும் ஒரு மனிதன், வாழ்க்கையில் ஒருமுறைமட்டும் பிறக்கவில்லை-திரும்பத் திரும்பப் பலமுறை பிறக்கிருன் , ஒருமுறை மட்டும் குழந்தைப் பருவத்தில்-குமரப் பருவத்தில்-கட்டிளங் காளைப்பருவத்தில் திகழ்வதில்லை-அவ்வாறு பலமுறை திகழ்கிருன். இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டு மால்ை, ஒருவன் தன் நூருவது வயதில்கூட, புதிதாகப் பிறக்கிருன்-குமரனுக-கட்டிளங் காளேயாக உலகில் உலவி வாழ்கிருன். இதல்ைதான் மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் அவனுக்கு வாழ்க்கை சலிப்பதில்லை -என்ற பேருண்மையைப் புரிந்துகொண்டேன்.

நான் இவ்வளவுநேரம் குறிப்பிட்டு வந்ததெல்லாம் பிள்ளைப் பேற்றைப் பற்றித்தான் ! ஒருவன் தன் இருபத்

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/217&oldid=656227" இலிருந்து மீள்விக்கப்பட்டது