பக்கம்:மலர் மணம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 மலர்

தைந்தாவது வயதில் மணம் செய்துகொண்டு பிள்ளையும் பெற்று விடுகிருன் என்று வைத்துக்கொள்வோம். அவன் அப்பொழுது ஒருமுறை பிறந்து குழந்தையாகிருன் , அதாவது, அந்தக் குழந்தையோடு குழந்தையாய்க் கொஞ்சி விளையாடிக் குழந்தை வாழ்க்கை வாழ்ந்து, அதில் ஒரு தனி இன்பம்-புது இன்பம் காண்கிறன். குழந்தை பள்ளிக்கூடம் படிக்கத் தொடங்கியதும் தானும் புதிதாகப் படிப்பு தொடங்குகிருன்; அதாவது, பிள்ளேயோடு பிள்ளேயாய், அரிச்சுவடியும் ஆரம்பக் கணக்கும் பார்த்து அதிலொரு மகிழ்ச்சி காண்கிருன். இவ்வாறு தன்பிள்ளை வளருந்தோறும் தானும் பிள்ளே யாக-அப்பிள்ளையின் கூடவே - அப்பிள்ளைக்காகவே வாழ்ந்து வருகிருன். இவனுடைய பேச்சு மூச்சு செயல்கள் யாவும் பிள்ளையின் பெருநலத்துக்காகவே இயங்குகின்றன. ஒவ்வொரு குழந்தையும் பிறக்குங் தோறும் மனிதன் இவ்வாறே புதுவாழ்வு தொடங்கு கிருன். மேலும், ஐம்பது அறுபது ஆண்டுகள் ஆகிவிட் டால் பேரக் குழந்தைகளின் மூலம் புதுவாழ்வு தொடங்கு கிருன். தொண்ணுாறு அல்லது நூறு வயது ஆகிவிட் டால், கொள்ளுப்பேரக் குழந்தைகள் மூலம் புதுவாழ்வு தொடங்குகிருன். தன் விரிந்து பரந்த குடும்பத்தின் பல கிளைகளையும் கண்டு கண்டு களிப்பதிலேயே காலம் கழிக்கிருன். அந்தக் குடும்பத்தை விட்டுப்பிரிய மனம் துணிய மாட்டாமல் தத்தளிக்கிருன். இதல்ைதான் வயதானுலும் வாழ்க்கை சலிப்பதில்லை.

திருமணமாகியும் பிள்ளை பிறக்காதவர்களுக்கு, நாற்பது வயதுக்குள்ளாகவே வாழ்க்கை சலித்து விடுவதின் இரகசியமும் இப்போது விளங்குமே ! பிள்ளை யில்லாதவர்கள், வாழ்க்கை சலிக்காதிருப்பதற்காகவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/218&oldid=656228" இலிருந்து மீள்விக்கப்பட்டது