பக்கம்:மலர் மணம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 217

பிறர் பிள்ளையைத் தத்து எடுத்து வளர்க்கிறார்கள் என்ற உண்மையும் ஈண்டு நினைவுகூரத்தக்கது.

எனவே, என்மகள் மலர் எங்கள் வீட்டிற்கு வந்த திலிருந்து, நானும் என்பெற்றாேரும் புதுவாழ்வு தொடங்கி யிருப்பதில் வியப்பொன்றும் இல்லையல்லவா ?

எங்களுக்குப் புதுவாழ்வு தொடங்கி யிருக்கல்ாம் ; ஆல்ை அல்லிக்கு இருண்டவாழ்வு தானே? சூல்விழாவின் முதல்நாள் இரவு நான் அல்லியிடம் சொன்னது

தினேவிற்கு வந்தது :- “ இனிமேல் நான் உன்னைக் கவனிக்கமாட்டேன்; என் பிள்ளையைத்தான் கவனிப் பேன்” என்று நான் சொன்னதும், ‘ நீங்கள்

விளையாட்டுக்குச் சொல்வது பலித்துவிடக் கூடாது அத்தான் ‘ என்று சொல்லி அல்லி அஞ்சியதும் என் தினேவிற்கு வரவே கிலேகலங்கினேன். இப்படியே சிறிது காலம் ஒடிற்று.

இப்பொழுதெல்லாம் நான் மாமாவீட்டுத் தெருப் பக்கமே போவதில்லை. எங்கேபோய் வருவதாலுைம் வேறு தெருவழியாகவே போய்வந்துகொண் டிருந்தேன். அதல்ை, அல்லியை எவ்வகையிலும் காணமுடியாதவனுய் இருந்தேன். ஒருநாள் முன்னிரவு உலாத்திவிட்டு, அல்லியைப் பற்றியும், அவளோடு வாழ்ந்த சிறிதுகால வாழ்க்கையைப் பற்றியும் நினைத்துக் கொண்டே விட்டிற்குள் நுழைந்தேன். எதிர்பாரா விதமாய் வீட்டிற்குள் ஓர் எலும்புக்கூடு நிற்கக்கண்டு வியப்புற் றேன்! ஆம் அல்லிதான் அந்த உருவம். கணவனைப் பிரிந்த மையால் காரைக்காலம்மையார் எலும்புருவம் ஆர்ை களாம் ! அல்லியோ கணவனுடன் இப்போது மகளேயும் பிரிந்திருக்கிருளே ! இப்படியில்லாமல் பின்னே எப்படி யிருப்பாள் ? இங்கேவந்திருப்பதின் நோக்கம் யாதோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/219&oldid=656229" இலிருந்து மீள்விக்கப்பட்டது