பக்கம்:மலர் மணம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 மலர்

ஒருவேளை, ஏதாவது குற்றம் கண்டுபிடித்து மாமா ஏசிப் பேசி விரட்டி விட்டாரா ? அல்லது, குழந்தையைப் பிரிந்துவாழ மனமில்லாமல், தானகவே தந்தையைப் பகைத்துக்கொண்டு அல்லி வந்துவிட்டாளா ? என்று ஊகம் பண்ணிப்பார்த்தேன். அப்படி யில்லையாம். குழந்தையைக் கொஞ்சநேரம் பார்த்துவிட்டுப் போய் விடலாம் என்று மாமாவுக்குத் தெரியாமல் வந்திருப்ப தாக அறிந்தேன். அவள் குழந்தையோடு கொஞ்சி விட்டுப்போக வந்ததாகத் தெரியவில்லை. அழுது விட்டுப் போகவே வந்தாள் போலும் ! ஒரே விக்கலும் விம்மலும் அழுகையும் அலறலும்தான்.

குழந்தையைக் கண்டதும், அவள் தன் முடிவை மாற்றிக்கொண்டு விட்டாள். பார்த்துவிட்டுப் போய்விட வேண்டும் என்று வந்தவள், “என்ன வந்தாலும் வரட்டும்; இனி நான் தாய்விட்டுக்குப் போக மாட்டேன்இங்கேயே தங்கிவிடுகிறேன்” என்று சொல்லி அம்மாவின் காலைக் கட்டிக்கொண்டாள். அம்மாவும் நானும் ஒத்துக் கொண்டோம். ஆனல் அப்பா உடன்படவில்லை. “ நாங்கள் அழைக்க வந்தபிோது உன் அப்பன் அனுப்ப மாட்டேன் என்று சொன்னன் அல்லவா? அவன் அனுப்பு வதாக ஒத்துக்கொண்டு என்னிடம் மன்னிப்பு கேட்டால் தான் நான் உன்னை இங்கே தங்கவிடுவேன். நீ வேண்டு மால்ை போய் அவன் கருத்தைக் கேட்டறிந்து சொல்லி அனுப்பு அதன்பிறகு நான் வந்து அழைத்துக்கொண்டு வருகிறேன். அதுவரையும் நீ அங்கேயேதான் இருக்க வேண்டும்” என்று அப்பா தீர்த்துச் சொல்லிவிட்டார். இதைக்கேட்ட அல்லி, என்ன நினைத்தாளோ! அடுத்த விநாடியே, குழந்தையையும் கண்ணெடுத்துப் பார்க்க விரும்பாதவளாய், விர்’ என நடையைக் கட்டிவிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/220&oldid=656231" இலிருந்து மீள்விக்கப்பட்டது