பக்கம்:மலர் மணம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனியும் உள்ளுரில் இருக்க எனக்குப் பிடிக்கவில்லை. எங்கேனும் வெளியூர் சென்று வேலை பார்க்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். மேலும் எனக்கு இன்னொரு பெரிய குறிக்கோள் உண்டு. நான் விஞ்ஞானத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்தவன் ஆதலால், எப்பொழுதுமே எனக்கு அந்தக் கலையில் ஒருகண் உண்டு. உலகின் மாபெரும் விஞ்ஞானிகள் சிலரைப்போல, நாமும் நம் வாழ்க்கையில் சில அரிய பெரிய விஞ்ஞான சாதனைகளைச் செய்து முடிக்கவேண்டும் என்ற பேராசை எனக்கு எப்போதுமே உண்டு. அதற்கேற்ற வாய்ப்பு வசதிகட்காகக் காத் திருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/222&oldid=860963" இலிருந்து மீள்விக்கப்பட்டது