பக்கம்:மலர் மணம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 மலர்

வேலை என்று அறிந்ததும் அயர்ந்து போனேன். அப்போது எனக்கு, ஒரு பேரறிஞரின் பொன் னெழுத்துக்கள் நினைவிற்கு வந்தன :-"நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானல், அதற்காகக் காலத்தை எதிர்பார்த்து எதிர்பார்த்துக் காலத்தையே வீணுக்கி வி டா தே ! இன்றைக்கே - இப்பொழுதே - இந்த விநாடியே தொடங்கிவிடு! அந்தவேலை-இந்தவேலை என்று பாராமல், முதலில் கிடைக்க இருப்பதையே முதல்படியாகக் கொண்டு உன் முன்னேற்றத்திற்கு ஆரம்பவிழா செய்துகொள். பின்னர் அதிலிருந்தபடியே உயர்ந்த குறிகோளுக்குத் தாவலாம்” என்ற அறிவுரை யைக் கடைப்பிடித்தேன். விஞ்ஞான ஆய்வுக்கூடத்தில் எழுத்தர்வேலை செய்துகொண்டே விஞ்ஞானியாக மாறலாம் என்ற முடிவுக்கு வந்தேன். எழுதிப் போட்டேன். வெற்றியே! பெற்றேருக்கும் மகள் மலருக்கும் ஆறுதல் சொல்லி, சென்னை சென்றடைக் தேன். -

சென்னை எனக்குப் புதியது அன்று. கல்லூரிப் படிப்பிற்காக நான்கு ஆண்டுகள் அங்கு வதிந்திருக் கிறேன். ஆல்ை அப்போது கல்லூரி விடுதியில் உண்டு உறைந்துவந்தேன். இப்போது வெளி யி ல் வாழ வேண்டும். எங்கள் ஆய்வுக்கூடத் தலைவர் மிகவும் நல்லவர். வெளியில் இடம் கிடைக்கும்வரை சில நாட்கள் ஆ ய் வு க் கூடத்திலேயே தங்கியிருக்க அன்புடன் ஒப்புதல் அளித்தார். அவருடைய அருள் கூர் ந் த ஒத்துழைப்பின் பேரில், எழுத்து வேலைபோக, மீதி நேரங் களில் விஞ்ஞான ஆராய்ச்சியில் கவனஞ் செலுத்தி வந்தேன். பல விஞ்ஞான துணுக்கங்களையும் தலைவரிடம் தெரிந்து கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/224&oldid=656234" இலிருந்து மீள்விக்கப்பட்டது