பக்கம்:மலர் மணம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 மலர்

யேற்றினர். என் குடி மாடியில்தான். குடியேறிய பிறகு பார்த்தேன் கீழே கமலா இருப்பதை ஏழரை ஆட்டை யான் சனி எப்படியோ பிடித்துக்கொண்டதே 1 ஐயோ தலைவலியே ஏழரை மாதமாவது அங்கே இல்லாமல் முடியுமா ? காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் இருக்க வேண்டும்!

நான் ஊரைவிட்டு வந்ததும், என் மகன் மலர் என்னைக் கேட்டுக்கேட்டு முதலில் சில நாட்கள் அழுது அடம்பிடித்ததாகவும், இப்போது அமைதியாய் விளே யாடி வருவதாகவும் அப்பா கடிதம் எழுதியிருந்தார். நானும் அலுவலகத்தில் என் கடமைகளைச் செவ்வனே செய்துவந்தேன்.

கமலாவின் கட்டாயக் காதல் முயற்சியைத் தவிர, வேறு எந்தத் தொல்லேயும் இல்லாது கடமையாற்றி வந்த எனக்குத் திடீரென ஒரு விபத்து நேர்ந்தது. ஆய்வுக் கூடத்தில் தவருன் முறையில் ஒரு சோதனையில் ஈடுபட்ட தால் எனக்கு வெடி விபத்து ஏற்பட்டது. உடம்பெல் லாம் காயம். நான் உணர்விழந்தேன். பின்னர் உணர்வு வந்து விழித்துப் பார்த்தபோது, மருத்துவமனையில் ப டு க் ைக யி ல் கிடப்பதை அறிந்தேன். என் பெற்றேர்க்குச் செய்தி அனுப்பியிருப்பதாகத் தலைவர் சொன்னர். .

மறுநாள் மாலை, அப்பா, அம்மா, கற்பகம், மலர், மாறன் ஆகிய ஐவருடன் அல்லியும் என் கட்டிலின் அருகில் நின்றுகொண்டிருந்ததைக் கண்டபோது நான் என் கண்களை நம்பவேயில்லை. ஊருக்குச் செய்தி போனதும், அல்லிக்கும் தெரிவித்தார்களாம். அப்போது மாமா ஊரில் இல்லையாம். வந்தது வரட்டும் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/226&oldid=656236" இலிருந்து மீள்விக்கப்பட்டது