பக்கம்:மலர் மணம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 மலர்

எங்கேயாவது போய்த் தங்கியிருக்கக் கூடாதா? அவள் படித்தவளாயிற்றே-எப்படியாவது பிழைத்துக்கொள்ள முடியாதா?

நானும் அப்பாவும் எங்கெங்கோ தேடினுேம். எந்த எந்த ஊருக்கோ ஆட்களை அனுப்பினுேம் போலிக்க்குத் தெரியப்படுத்தினுேம். செய்தித்தாள்களில் விளம்பரப் படுத்தினுேம். அல்லி கிடைக்கவேயில்லை. மலர் தாயை மறந்துவிட்டாள். ஆனல் என்னுல் இயலுமா? ஆம்மா எவ்வளவோ ஆறுதல் சொன்னர்கள்-ஆறவில்லை. எந்தத் துயரமும் உடனே ஆறிவிடுவதில்லை. அது தனக்கு வேண்டிய நாட்களே எடுத்துக்கொள்ளத்தான் செய்கிறது. “யார் ஆற்றுவார்-நாள் ஆற்றும்” என்பது எவ்வளவு அநுபவமொழி ! .

மீண்டும் எனது வேலையை ஒப்புக்கொள்ளச் சென்னைக்குப் புறப்பட்டேன். ‘ உயிருக்குத் தீம்பான அந்த வேலை இனிவேண்டவே வேண்டாம்” என்று என் பெற்றேர்கள் எவ்வளவோ தடுத்தார்கள். நான் கேட்பேணு ? ‘கோழைக்கு எது தடைக்கல்லாக இருக் கிறதோ, அதனையே தன்னை முன்னேற்றும் படிக் கல்லாகக் கொண்டு ஏறி வீரன் மேலே சென்றுகொண் டிருப்பான்” என்று ஓரறிஞர் கூறியிருக்கிறார். ‘செய்து கொண்டிருக்கும் வேலையை ஒருவன் வெறுத்தால், அவனது வாழ்க்கையின் கடைசி அத்தியாயம் முடிந்து விட்டதாகவே பொருள் ‘ என்றும், ‘ அத்தகையவன் இப்பொழுதே தன் சவக்குழியில் ஒரு காலே விட்டுக் கொண்டவனவரன்” என்றும் அறிஞர்கள் எழுதிவைத் துள்ள புரட்சிக் கருத்துக்களை நான் அறிந்து வைத்துள் ளேன். வேறு வேலைக்குப் போகவும் செய்யலாம்; ஆனல் அதுவரையும், செய்யும் வேலையை மனம் ஒப்பிச் செய்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/230&oldid=656241" இலிருந்து மீள்விக்கப்பட்டது