பக்கம்:மலர் மணம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 229

வேண்டும். இத்தகைய உறுதியுடைய என்ன, இடை யிலே ஏற்பட்ட சிறு தீங்கு என்ன செய்துவிட முடியும்? தாய்தந்தையரைத் தேற்றி, சென்னைக்குப் புறப்பட்டேன். வேண்டுமானல் சில ஆண்டுகள் என்னுடன் வந்து வதியும் படி அவர்களைக் கேட்டுக்கொண்டு சென்னை சேர்ந்தேன்.

மீண்டும் வழக்கம்போல் என் அலுவலக வேலைகளைக் கவனித்து வந்தேன். விஞ்ஞான அறிவிலும் ஆராய்ச்சி யிலும் மேலும் முன்னேறிக்கொண்டிருந்தேன். சென் னேக்கு அல்லி வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போன தைக் கொண்டு, எனக்குத் திருமணம் ஆகிவிட்டது என அறிந்துகொண்டதால், கமலா தன் காதல் முயற்சிகளைக் கைவிட்டு, என்ன அண்ணன் முறைபோட்டு அழைக்கத் தொடங்கிள்ை. இதல்ை, எவ்வளவோ வே த னை குறைந்தது. சனி பெயர்ந்து விட்டதல்லவா ?

சில வாரங்கள் சென்றதும், ஊரிலிருந்து கடிதம் வந்தது. பாண்டியனே வேற்றுார் ஒன்றிற்கு மாற்றி விட்டார்களாம். நானும் இல்லாமையால், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தனியாக ஊரிலே யிருக்கப் பிடிக்கவில்லை யாம். மலரும் அப்பா-அப்பா என அடிக்கடி அழுகிரு ளாம். உணவுக் கடையில் சாப்பிடுவதால் என்னுடம்பும் .ெ க ட் டு ப் போகுமாம். அப்பாவாலும் அம்மாவாலும் என்னைவிட்டுப் பிரிந்திருக்க முடியவில்லையாம். எனவே, நான் முன்பு வேண்டிக் கொண்டபடி, தாங்களும் சென் னைக்கு வந்து சில ஆண்டுகள் தங்கலாம் என்று விரும்பு வதாக அப்பா கடிதம் எழுதியிருந்தார். உடனே புறப் பட்டு வரும்படி நானும் வலியுறுத்திக் கடிதம் எழுதி னேன். அதன்படி, நிலங்களைக் குத்தகைக்காரர்களிடம் ஒப்படைத்து, வீட்டில்ஒருவரைக் குடிவைத்து, கொடுக்கல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/231&oldid=656242" இலிருந்து மீள்விக்கப்பட்டது