பக்கம்:மலர் மணம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 மலர்

வில்லையே, என்பது. இந்த இரண்டு குறைகளுக்குமே இடமில்லைபோல் தெரிகிறதே ! .

எப்படியாவது அல்லியைப் போய்க் காணவேண்டும் -அவள் உடன்பாட்டையும் தெரிந்து கொள்ளவேண்டும் -அதன் பிறகு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரிவித்து விட்டு அவளே அழைத்துக்கொண்டு வரவேண்டும்என்று எண்ணினேன்.

அல்லி ஏன் எங்களிடம் வந்து சேர்ந்துகொண் டிருக்கக் கூடாது? ஒருவேளை, என் தந்தையார் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று அஞ்சியிருக்கலாம். முன்பு ஒருமுறை அவர் ஏற்றுக்கொள்ளாமல் விரட்டிவிட்டார் அல்லவா? எனக்கு மனைவி வேண்டும் என்பது அவருக்குப் புரிந்தால்தானே ? நான் என்ன, உணர்ச்சி யற்ற மரக்கட்டையா? அல்லது, தள்ளாத கிழவனுகி விட்டேன ? என்னை மட்டும் காமநோய் சும்மா விட்டு விடுமா ?

வாழ்க்கையில், மற்ற நோய்களைவிட மிக்க ஆண்டுகள் நீடித்திருப்பதால் எல்லாவற்றினும் காம நோய் கொடியதென்றும், பிறந்ததுமுதல் இறக்கும் வரையும் நீடித்திருப்பதால் பசிநோய் அதனினும் கொடியதென்றும் கூறுவது வழக்கம். என்னைக் கேட்டால், பசிகோயினும் காமநோயே கொடியது என்பேன். நான் ஒரு கோணத்தில் நின்று காமநோயின் கொடுமையைக் காண்கிறேன். உணவு இல்லாதவன் தான் இன்னொருவருடைய உணவை விரும்புகிருன்-- கெஞ்சுகிருன்-கேட்கிருன். இருப்பவன் அவ்வாறு செய்வதில்லை. கெஞ்சிக்கேட்ட ஏழையே கூட திடீர்ப் பணக்காரணுகிவிட்டால், ஒருவர் உண்ணுவதற்கு வருந்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/236&oldid=656247" இலிருந்து மீள்விக்கப்பட்டது