பக்கம்:மலர் மணம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 235

அழைத்தாலும், அவர் வீட்டில் சென்று உண்ண ஏழு முறுக்கு-எட்டுக் கிறுக்கு பண்ணுகிருன். கா ம ம் அத்தகையதன்று. மனைவி இருப்பவன், இல்லாதவன் எல்லோருமே வேறொருவர் பெண்ணே விரும்பும் இழிநிலைக்கு ஆளாவதைக் காணலாம். இதிலிருந்து காமநோயின் கடுங்கொடுமை புரியவில்லையா ? நான் மட்டும் இதற்கு விதிவிலக்கா ? ஆல்ை, நான் போராடி என் உள்ளத்தைக் கட்டுப்படுத்த முயன்றேன். இல்லா விடின், கண்ட கண்ட போரிலே மேயும் மாட்டுக்கும் மனிதனுக்கும் என்ன வேற்றுமை ? .

அல்லியின் இருப்பிடத்தை அறிந்ததும், அன்பு ஒரு புறம் இருக்க, அவளை எப்படியாவது விரைவில் அடைய வேண்டும் என்ற துடிப்பில் காமத்தியும் ஒரு புறம் கொழுந்து விட்டு எரிந்தது. மறுநாள் மாலே, மலர் சொன்ன அடையாளத்தைக் கொண்டு அல்லியின் இருப் பிடம் நோக்கிச் சென்றேன். ஆசிரியைகள் தங்குவதற்கு என்று, பள்ளிக்கூடத்தை ஒட்டி விடுதிகள் கட்டித்தரப் பட்டிருந்தன. அப்பகுதிக்குள் சென்று, மங்களம் என்னும் ஆசிரியை வீடு எது? என்று வினவினேன். ஒரு வீட்டைக் காட்டினர்கள். நான் அடக்கமுடியாத ஆவலுடன் அங்கு சென்றேன். அந்த வீட்டு வாயிற் படியில் பெண்ணுருவத்தில் ஒரு பெருங் கரும்பூதம் நின்று கொண்டு, என்னே வரவேற்கும் முறையில், யாரைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறீர்கள் ? என்று கேட்டது. மங்களம் அம்மாவைப் பார்க்கவேண்டும் என்றேன். நான்தான் மங்களம்-என்ன வேண்டும் ? என்று அப்பூதம் வினவியது. எனக்குத் துக்கிவாரிப் போட்டது. என் அல்லி எங்கே? இந்தக் கரிய பெரிய பூதம் போன்ற பெண் எங்கே ? குழந்தை மலர் உளறியதை நம்பி. இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/237&oldid=656248" இலிருந்து மீள்விக்கப்பட்டது