பக்கம்:மலர் மணம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 மலர்

அம்மாவை அல்லி என்று நினைத்துக்கொண்டு வந்து விட்டோமே என்று வெட்கப்பட்டு வெல வெலத்துப் போனேன்.

இதுவும் ஒருவகையில் நல்லதுதான். மலரை அன்போடு ஆதரித்து வருவதற்காக அந்த அம்மாவுக்கு நான் நன்றி செலுத்த வேண்டு மல்லவா ? “ என் மகள் மலர் என்ற சிறுமி உங்களைப்பற்றி அடிக்கடி சொல்லு வாள். அவளே அன்போடு கவனித்து வருவதற்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்த மிகவும் கடமைப் பட்டுள்ளேன். என் நன்றியைத் தெரிவித்துப் போவதற் காகவே வந்தேன். நான் போய் வருகிறேன். வணக்கம்!” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். ‘ யாருமலரா-சிறுமியா? அவளே எனக்குத் தெரியாதே. நான் பெரிய வகுப்பு ஆசிரியை. சிறுமிகளைக் கவனிக்கும் சின்ன வகுப்பு ஆசிரியை-மங்களம் என்னும் பெய ருடைய வேறு ஓர் அம்மா அதோ அந்த வீட்டில் வசிக் கிறர்கள். என்னிலும் இளைய அம்மா-சிவப்பாயிருப் பார்கள். அங்கே போய்ப் பாருங்கள் !” என்று கறுப்பு மங்களம் சொன்னர்கள். என் வயிற்றில் பால் வார்த் தாற்போல் இருந்தது. அந்த மங்களம் அல்லியாகத் தான் இருக்கவேண்டும் என்ற நன்னம்பிக்கை முனேக்கு வந்தேன். உடனே என் சிவப்பு மங்களத்தின் இருப் பிடம் நோக்கிச் சென்றேன்.

நீண்டநாள் பிரிவுக்குப்பின் ஏற்படும் முதல் சந்திப்பு இது. என்னேக் கண்டதும் அல்லி மெய்ம் மறந்து போவாள். நானே நிலைதடுமாறுவேன். இரு வரும் ஆரக்கட்டித்தழுவிக் கொள்வோம். அப்போது, இன்ப உணர்வின் எக்களிப்பிலே என் இதயம்வெடித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/238&oldid=656249" இலிருந்து மீள்விக்கப்பட்டது