பக்கம்:மலர் மணம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மலர்

{

விட்டு விடுகிருயா ?” என்று கேட்டேன். 5 வேண்டாங்க, சும்மா வேண்டுமானுல் ஏற்றிக்கொண்டு போய் விடுகிறேன், வந்து குந்துங்க” என்றான். கல்வியறிவற்ற காட்டுப் புறத்தாரிடம் காணப்படும் இத்தகு பரிவை, படித்த பட்டனவாசப் பிசாசுகளிடம் எதிர்பார்க்க முடியுமா ? இருப்பினும், எனக்கென்னவோ சும்மா ஏறிச்செல்வது பிடிக்கவில்லை. ‘ இது யாருடைய வண்டி” என்று கேட்டேன். “அது தானுங்க மாயாண்டி முதலியார் வண்டி. அவரையும் அம்மாவையும் அழைத்துக் கொண்டு வந்து இந்த ரயிலில்தான் ஏற்றிவிட்டுத் திரும்புகிறேன்” என்றான். ‘ அப்படியா அவர்கள் எங்கே போகிறார்கள்? எப்பொழுது வருவார்கள்தெரியுமா ?” என்றேன். சற்றுத் திணறிவிட்டு, ‘ தெரி யாதுங்க” என்று சொல்லிவிட்டான். ‘ சரி, இங்கே நான் ஒருவரைப் பார்க்கவேண்டும், நீ போ, நான் பிறகு வருகிறேன்” என்று சொல்லி அவனே அனுப்பி விட்டேன். வண்டி சிட்டாய்ப் பறந்தது. என் மாமா வீட்டு வண்டி என்று தெரிந்தும், நான் எந்த மானத்தோடு அதில் ஏறுவது? ஊர் நோக்கி நடந்து சென்று கொண்டே யிருந்தேன்.

நான் இந்த இருட்டு நேரத்தில் அந்த வழியே தனி யாகச் சென்றதே இல்லை. வழியில் உள்ள ஆற்றங் கரையில் எங்கள் ஊர்ச் சுடுகாடு இருக்கிறது. அதில் ஒரு பிணம் எரிந்து புகைந்து கொண்டிருந்ததும் என் கண்ணுக்குத் தெரிந்தது. ஆசை வெட்கம் அறியாது’ என்று சொல்லுவார்கள்-ஆசை அச்சமும் அறியாது போலும் ! அல்லிமேலுள்ள அன்பு, ஆர்வம் என்னும் இரண்டு கால்களால் விரைந்து நடந்து சென்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/24&oldid=656251" இலிருந்து மீள்விக்கப்பட்டது