பக்கம்:மலர் மணம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 239

நீங்கள் குடியிருக்கும் இடமும், மலர் படிக்கும் இடமும் கண்டு பிடிக்கப்பட்டன. என் வேண்டுகோளின்படி, அந்தப் பள்ளிக்கூடத்தில் என்ன ஆசிரியையாக எங்கள் தலைவி அமர்த்தினர்கள். நான் உங்களைக்கூட இரண்டு மூன்று முறை எங்கெங்கோ கண்டு ஒளிந்துகொண்டிருக் கிறேன். உங்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது போனமைக்கு மிகவும் வருந்துகிறேன். இதுதான் என் வரலாறு ‘

“ என்ன காரியம் செய்தாய் அல்லி | சென்னைக்கு வந்தவள் நேரே ஏன் என்னிடம் வந்திருக்கக் கூடாது ?”

‘ உங்களிடம் வந்தால் உங்கள் அப்பா ஏற்றுக் கொள்ளமாட்டாரே. முன்பு ஒரு முறை நம் ஊரில் மலரைப் பார்ப்பதற்காக நான் உங்கள் வீட்டிற்கு வந்த போது, அங்கேயே தங்கிவிடுவதாகச் சொன்னேன் அல்லவா ? என் தந்தையார் மன்னிப்பு கேட்டுக்கொண் டால்தான் என்னே ஏற்றுக்கொள்ள முடியும் என்று உங்கள் தந்தையார் உரைத்துவிட்டாரே ! எனவே, என் தந்தையார் மன்னிப்பு கேட்கப்போவதும் இல்லேஉங்கள் தந்தையார் என்னே ஏற்றுக்கொள்ளப் போவது மில்லை. ‘

‘ என் தந்தையார் முன்பு அப்படி மொழிந்தது உண்மைதான்-நினைவு இருக்கிறது. ஆல்ை இப் பொழுது அவர் அடியோடு மாறிவிட்டார். நீ கிடைத் தால் போதும் என்றிருக்கிறார். அதல்ைதான் எனக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க வேண்டுமென்ற பேச்சே எடுக்கவில்லை. உன்னைத் தேடுவதற்காக என்ைேடு சேர்ந்துகொண்டு எவ்வளவோ பாடுபட்டார் தெரியுமா? அந்த முயற்சியை அவர் இன்னும் கைவிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/241&oldid=656253" இலிருந்து மீள்விக்கப்பட்டது