பக்கம்:மலர் மணம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 24f

யறம் நடத்தும்படி உங்களே மன்றாடி வேண்டிக்கொள் கிறேன்.” - -

‘அப்படி சொல்லக்கூடாது அல்லி ; உன்னே அழைத்துப் போகலாம் என்று நான் எவ்வளவு ஆவலாக வந்திருக்கிறேன் தெரியுமா ?”

என்று சொல்லிக்கொண்டே ஆ ர் வ. த் து ட ன் நான் அல்லியின் கையைப் பற்றினேன். ‘ விடுங்கள் என் கையை என் உடன்பாடின்றி என்னத் தொடா தீர்கள் இப்பொழுதே இந்த இடத்தைவிட்டு அகன்று விடுங்கள் ‘ என்று எரிந்து காய்ந்து அல்லி என்னே எச். சரித்தாள். காமவெறி பிடித்தவள் என்று தன்னைத் தன் தந்தை வைதது தன் உள்ளத்திலே தைத்தது என்று அவள் சொன்னுளே, அதைவிட இப்பொழுது அவள் என்னே எச்சரித்தது மிகவும் என் உள்ளத்திலே தைத்தது. எம்மைத் திண்டாதீர்!’ என்று சொன்ன மனைவியாரை நோக்கி, ‘ இனி உன்னேம்ட்டுமல்ல-உன் பெண் இனத்தையே, உடம்பால் மட்டுமல்ல-உள்ளத் தாலும் தீண்டவே மாட்டேன்” என்று சூள் உரைத்து அதன்படியே நடந்துகாட்டிய திருநீலகண்டரின் வர லாறு என் நினைவிற்கு வந்தது. அவ்விதமே நடந்து கொள்ளவேண்டும் என்ற மு டி வு க் கு நானும் வந்தேன். இந்த முடிவை அல்லியிடம் தெரிவித்தேன். ‘இனி நான் உன்னத் தொடக்கூட மாட்டேன். நீ என் மனைவியாக இல்லாமல், என் உடன்பிறந்தவள் போலவே என்னுடன் வந்து இருக்கலாம். எனக்காக இல்லாவிட் டாலும், மலருக்காகவாவது வா’ என்று கெஞ்சினேன். அதற்கும் அவள் மறுத்துவிட்டாள். இஞ்சி தின்ற குரங் கானேன்-இலவங் காத்த கிளி ஆனேன். வறிதே வீடு திரும்பினேன். இதை எவரிடமும் சொல்லவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/243&oldid=656255" இலிருந்து மீள்விக்கப்பட்டது