பக்கம்:மலர் மணம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245

மலர் இப்பொழுது பருவமங்கை எஸ். எஸ். எல். சி. படிப்பு முடித்திருந்தாள். மாறனே கட்டிளங் காளே கல்லூரிப் படிப்பு முடித்திருந்தான். கட்டின்றி விளையாடிக் கொண்டிருந்த இருவரும், இப்பொழுது தாங்களாகவே தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக் கின்ற்னர். இது பருவத்தின் விளைவு போலும்!

எங்கள் இரு குடும்பத்தாரும் சேர்ந்து, மலருக்கும் மாறனுக்கும் மணம் செய்துவைப்பதென முடிவு செய் தோம். எங்களுக்குள் எந்தத் தகராறும் எழவில்லை. யார் வேண்டுமானலும் நகை போட்டாலும் போடலாம் -விட்டாலும் விடலாம் ; சீர் செய்தாலும் செய்யலாம்செய்யாவிட்டாலும் விடலாம். அந்த அளவுக்கு, நாங்கள் வேறு-அவர்கள் வேறு என்ற பிரிவினை சிறிதும் இன்றி, இரு குடும்பத்தினரும் இரண்டறக் கலந்து ஒன்றியிருந் தோம். நாங்கள் எங்கள் பெறலருஞ் செல்வமாகிய மலரை அவர்களுக்குக் கொடுக்கிருேம்-அவர்கள் தங்கள் அரும்பெருஞ் செல்வமாகிய மாறனே எங் களுக்குக் கொடுக்கிறார்கள். இதைவிட இன்னும் வேறு எந்தச் சிறந்த செல்வத்தைக் கொடுத்து வாங்குவது ? சங்க நிதி, பதும நிதி என இரு நிதியங்கள் தேவ உல கத்தில் இருப்பதாகக் கூறுகிறர்கள். மலரும் மாறனும் தான் எங்களுக்கு அந்த இருபெரு நிதியங்கள் ! மேலும், என்னையும் அல்லியையும் எங்கள் பெற்றேர்கள் படுத்தி யதைப்போல, நாங்கள் யாரும் மலர்-மாறன் வாழ்க்கை யில் குறுக்கிட மாட்டோம். அவர்தம் இன்பவாழ்விற்கு எங்களால் இயன்றவரை ஒத்துழைப்போம்.

அல்லி தவிர மற்ற அனைவருக்கும் தி ரும ண அழைப்பு விடுத்தோம். நேரில் சென்று அழைக்கவேண் டியவர்களே நேரில் சென்று அழைத்தோம். எல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/247&oldid=656259" இலிருந்து மீள்விக்கப்பட்டது